விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் எதிர்வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து எதிர் வரும் சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் இப்படம் ஒளிபரப்பாகிறது.
'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகியவற்றை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள படம் இது.
இதில் விக்ரம் ஏழு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், கே.எஸ்.ரவிகுமார், இந்தியக் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் வெளியாகி இருக்க வேண்டும். எனினும் கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில், அனைத்தையும் கடந்து எதிர்வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். மேலும், இதன் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள முன்னணி நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திரத் தினத்தன்று தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.