முழு நகைச்சுவை நடிகராக மாறிய இயக்குநர் ரவிமரியா

முழு நகைச்சுவை நடிகராக மாறிய இயக்குநர் ரவிமரியா

1 mins read

ரவி­ம­ரி­யாவை வில்­லன், நகைச்­சுவை நடி­க­ராக மட்­டுமே பலர் அறிந்­தி­ருப்­பர். ஆனால், அவர் ஓர் இயக்­கு­நர். 'ஆசை ஆசை­யாய்', 'மிளகா' என இரண்டு படங்­களை இயக்கி உள்­ளார். அதன் பிறகு, நட்­புக்­காக ஒரு படத்­தில் நகைச்­சுவை கதா­பாத்­தி­ரத்­தில் தலை­காட்­டப்­போக, இப்­போது முழு நேர நகைச்­சுவை நடி­க­ரா­கி­விட்­டார்.

"முதல் காதலை எப்­படி மறக்க முடி­யாதோ, அதே­போல் முதல் படத்­தை­யும் மறக்க இய­லாது. இயக்­கு­நர் ஆக வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் சென்னை வந்­தேன். ஆனால், நடி­க­ரா­க­வும் ரசி­கர்­கள் என்னை ஏற்­றுக்­கொண்­ட­னர்.

"நானும் இயக்­கு­நர்­தான் என்­றா­லும், நான் நடிக்­கும் படங்­க­ளின் இயக்­கு­நர்­க­ளு­டைய பணி­யில் ஒரு­போ­தும் தலை­யிட்­ட­தில்லை. அவர்­க­ளாக என்­னி­டம் ஏதா­வது யோசனை கேட்­டால் தெரி­விப்­பேன். ஏனெ­னில் இயக்­கு­நர்­கள் எவ்­வ­ளவு சுமையை சுமக்­கி­றார்­கள் என்­பது எனக்­குத் தெரி­யும்.

"வருங்­கா­லத்­தில் நிச்­ச­ய­மாக அனை­வ­ரும் அசந்­து­போ­கும் வண்­ணம் ஒரு படத்தை இயக்­கு­வேன். அண்­மை­யில் வெளி­யான 'இடி­யட்' படம் வரை எனக்­கான, தனித்­து­வ­மான கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்து வரு­கின்­றன. எனவே, முழு நகைச்­சுவை நடி­க­ராக மாறி­விட்­டேன்," என்­கி­றார் ரவி­ம­ரியா.

தற்போது 'குருமூர்த்தி', அசோக் செல்வனின் 'ஹாஸ்டல்', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', 'காட்டேரி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ரவிமரியா.