நடிகர் விஜய்க்கு தாம் அண்ணனாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலை நடிகர் மோகன் மறுத்துள்ளார்.
தற்போது 'ஹரா' என்ற படத்தில் நடித்து வரும் அவர், அதன் வெளியீட்டுக்குப் பிறகே மற்ற படங்களில் நடிப்பது குறித்து முடிவெடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 66' படத்தில் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
எனினும், மோகன் தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

