'நகைச்சுவை நடிப்பு கடினம்'

'நகைச்சுவை நடிப்பு கடினம்'

3 mins read
9d68ef3d-b0a3-43e8-a170-b70c70d09d6d
-

'பீஸ்ட்' படம் குறித்த கல­வை­யான விமர்­ச­னங்­கள் வெளி­வந்த போதி­லும், விஜய்­யும் பூஜா ஹெக்­டே­வும் அடுத்­த­டுத்த படங்­களில் கவ­னம் செலுத்­தத் தொடங்கி உள்­ள­னர்.

தாம் நடிக்­கும் படங்­கள் எந்த மொழி­யில் தயா­ரா­கின்­றன என்­ப­தை­விட, தமக்­கான கதா­பாத்­தி­ர­மும் அது உரு­வாக்­கப்­பட்­டுள்ள வித­மும்­தான் தமக்கு முக்­கி­யம் என்­கி­றார் பூஜா.

'கோல­மாவு கோகிலா', 'டாக்­டர்' ஆகிய இரு படங்­க­ளைப் பார்த்­த­பி­றகு, இயக்­கு­நர் நெல்­சன் மீது தமக்கு மிகுந்த நம்­பிக்கை ஏற்­பட்­ட­தா­க­வும் 'பீஸ்ட்' படத்­தைப் பொறுத்­த­வரை தமது நம்­பிக்கை வீண் போக­வில்லை என்­றும் சொல்­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை நகைச்­சு­வை­யாக நடிப்­பது மிகக் கடி­ன­மான விஷ­யம். அதி­லும், எதிர்­மறை நகைச்­சுவை (பிளாக் காமெடி) என்­பது ஒரு­சி­ல­ருக்கு மட்­டுமே கைவந்த கலை.

"நெல்­ச­னுக்கு இந்த எதிர்­மறை நகைச்­சுவை அத்­துப்­படி. அத­னால் அவர் அமைக்­கும் காட்­சி­கள் இயல்­பா­கவே கச்­சி­த­மா­கவே அமை­கின்­றன. அவ­ரு­டைய பாத்­தி­ரப் படைப்­பு­கள் அனைத்­துமே சுவா­ர­சி­ய­மா­க­வும் வித்­தி­யா­ச­மா­க­வும் உள்­ளன.

"ரசி­கர்­க­ளின் ஆர்­வத்­தைத் தூண்­டக்­கூ­டிய வகை­யில்­தான் கதா­பாத்­தி­ரங்­களை அவர் தேடிப் பிடிக்­கி­றார். அதை­விட முக்­கி­யம், அவற்­றுக்­குப் பொருத்­த­மான நடி­கர்­களை அவர் நடிக்க வைக்­கி­றார்.

"அந்த நடி­கர்­களை எப்­படி கண்டு­பி­டித்­தீர்­கள் என்று ஒரு­முறை அவ­ரி­டமே கேட்­டேன். அதற்கு, 'அனை­வ­ரும் என்­னு­டைய நண்­பர்­கள்' என்­றார்.

"நீண்ட கால­மாக அவர்­க­ளைத் தமக்­குத் தெரி­யும் என்­றும் அவர்­கள் தன் வாழ்­வில் முக்­கி­ய­மா­ன­வர்­கள் என்­றும் குறிப்­பிட்­டார்," என்று சொல்­லும் பூஜா ஹெக்­டே­வும் நகைச்­சுவை நடிப்­பில் கெட்­டிக்­கா­ரர்­தான்.

தாம் இது­வரை ஏற்று நடித்­துள்ள வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­கள் தமக்கு ரசி­கர்­க­ளி­டம் நல்ல பெயர் வாங்­கிக் கொடுத்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், தமது திரைப்­ப­ய­ணம் இப்­போது இருப்­பது போன்றே சுமூ­க­மாக தொடர்ந்து நீடிக்­கும் என்று நம்­பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"எனது திரை வாழ்க்­கையை அவ்­வ­ளவு எளி­தில் கட்­ட­மைக்க முடி­ய­வில்லை. அதற்­காக நிறைய சிர­மங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றேன். தமி­ழில் நான் அறி­மு­க­மான படம் 'முக­மூடி'.

"பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் அந்­தப் படத்­தில் நடித்து முடித்த பிறகு, 'மொஹஞ்­ச­தாரோ' பட வாய்ப்பு கிடைத்­தது. அதற்­காக இரண்டு ஆண்­டு­கள் ஒப்­பந்­தம் செய்­து­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

"அப்­ப­டி­யெ­னில், மூன்று ஆண்­டு­களில் இரண்டு படங்­களில் மட்­டுமே நடிக்க முடி­யும். அதி­லும், எதிர்­கா­லம் குறித்த எந்­த­வித நம்­பிக்­கை­யும் அப்­போது என் மன­தில் ஏற்­ப­ட­வில்லை. ஒரு வகை­யில் ரோலர் கோஸ்­டர் ராட்­டி­னம் போல் நாள்­கள் ஏற்­ற­மும் இறக்­க­மு­மாக நகர்ந்­தன. அந்­தச் சம­யத்­தில் எனது குடும்­பத்­தார்­தான் என்­னைத் தாங்­கிப்­பிடித்தனர். தொடர்ந்து போராட வேண்­டும் என்ற எண்­ணத்தை மன­தில் விதைத்­த­னர்.

"அன்று என் குடும்­பம் என்னை ஊக்­கப்­ப­டுத்தி இருக்­கா­விட்­டால், பூஜா என்ற நடிகை இருந்­தி­ருக்க வாய்ப்­பிலை," என்று சொல்­லும் பூஜா, திரைப்­ப­டங்­களில் இடம்­பெ­றக்­கூ­டிய கதா­பாத்­தி­ரங்­களை இன்­றைய இளம் பெண்­கள் தங்­கள் வாழ்க்­கை­யில் முன்­மா­தி­ரி­யா­கக் கொள்ள வேண்­டும் என்­கி­றார்.

அத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய சிறப்­பான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என்­ப­து­தான் தமது விருப்­பம் என்­றும் சொல்­கிறார்.

"பெண்­க­ளின் தன்­னம்­பிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டும், அவர்­க­ளின் பிர­தி­நி­தி­யாக திரை­களில் தோன்ற வேண்­டும் என்று ஆசைப்­படுகி­றேன்.

"கடி­ன­மாக உழைப்­ப­வர்­கள், அதற்­கேற்ப பலன்­களை அறு­வடை செய்­ய­லாம் என்­பார்­கள். கடின உழைப்பு அதிர்ஷ்­டத்­தை­யும் கொண்­டு­வ­ரும் என்­றும் என் வீட்­டில் கூறு­வ­துண்டு.

"அது என் மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருக்­கிறது. கடி­ன­மாக உழைக்­கும்­போது நம் உள்­ள­மும் வலு­வ­டை­யும். எதிர்­மறை எண்­ணங்­களை எதிர்க்­கத் தொடங்­கி­விட்­டால் வாழ்க்­கை­யில் நாம் வெற்றி பெற­லாம்.

"நான் சந்­திக்­கக்­கூ­டிய இளம் பெண்­க­ளி­டம் இதைத்­தான் அறி­வு­ரை­யா­கச் சொல்­கி­றேன். வாழ்க்­கை­யில் ஏதா­வது சாதிக்க வேண்­டும் என்று விரும்­பி­னால் அதற்கு உழைப்­பும் முயற்­சி­யும்­தான் நமக்­குத் தேவை.

"எனவே நம்­பிக்­கை­யு­டன் உழை­யுங்­கள். வெற்றி கிடைக்­கும். அதற்கு நானே சிறந்த உதா­ர­ணம்," என்கிறார் பூஜா ஹெக்டே.

'பீஸ்ட்' படம் வசூல் ரீதியில் சாதித்துள்ளது என்பதால் பூஜா சத்தமின்றி தனது சம்பளத்தை சற்றே உயர்த்தி இருப்பதாகத் தகவல்.

தமிழில் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.