திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
b8d760ba-f523-4ddc-a84b-ac718f6a41ef
-
multi-img1 of 3

 தமது தந்தை திரைத்துறை அல்லாமல் வேறு துறையைச் சார்ந்தவராக இருந்திருந்தால், தாம் திரைத்துறைக்கு வந்தி ருக்க வாய்ப்பே இல்லை என்கிறார் இளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷன்.

அண்மையில் சமூக ஊடகம் வழி ரசிகர்களுடன் கலந்துரை யாடிய அவர், சிறு வயது முதலே தந்தையின் தாக்கம் தம்மிடம் அதிகம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 'பிக்பாஸ்' புகழ் கவின், அபர்ணா தாஸ் நடிக்கும் புதிய படத்துக்கு 'தாதா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகிறது.

 அரிசி உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது தவறு என்கி றார் நடிகை ஆத்மிகா. எனவே, அரிசி வெறுப்பாளர்கள் அதற்கு எதிரான பிரசாரத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பல ஆண்டுகளாக நான் அரிசி உணவைச் சாப்பிட்டு வருகிறேன். அது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது. நமக்குப் பிடித்த மான, அதே சமயத்தில் உடல் நலனைப் பாதிக்காத எதையும் நாம் சாப்பிடலாம்," என்கிறார் ஆத்மிகா.

 வருங்கால தலைமுறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாம் அனைவரும் புவி நலனைக் காக்க வேண் டும் என்கிறார் ரகுல் பிரீத் சிங். "உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான அனைத்தையும் இந்தப் பூமி தன்னுள் கொண்டிருக்கிறது. தேவைக்கு ஏற்ப எல்லாமுண்டு. ஆனால் நம் பேராசைக்கு ஏற்ப இருக்காது," என்று தமது சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வாய்ப்பும் நேரமும் இயற்கை அழகு குவிந்துள்ள பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வது ரகுலின் வழக்கம்.

அந்த வகையில் அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முசௌரி பகுதிக்குச் சென்று, அங்குள்ள மலைத்தொடர்களுக்கு மத்தியில் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

 அண்மையில் மாலத்தீவுக்கு சென்று விடுமுறையை கழித்த ரெபா மோனிகா, அடுத்து இத்தாலி சென்றுள்ளார். அங்கு வெனிஸ் நகரைச் சுற்றிப்பார்த்த போது அதன் அழகில் தமக்கு எல்லாம் மறந்துபோனதாக சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.