'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' என்ற தலைப்பில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பற்றி ஒரு புத்தகம் வெளியீடு கண்டுள் ளது. ரஜினி இதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், தான் அடுத்த பிறவியில் தன் மனைவி பூர்ணிமாவாக பிறக்க ஆசைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"பூர்ணிமா மூன்று மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகையாக இருந்தபோதுதான் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். வீடு தேடிச் சென்று பெண் கேட்டபோது, அவரது தந்தை உடனே சம்மதித்தார். அது பெரிய விஷயம்.
"எப்படியோ சினிமாவையும் குடும்ப வாழ்க்கையையும் மிகச் சரியாகச் சமாளித்து எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம்.
"ஆனால் ஒரு விஷயம். இன்னொரு பிறவி இருந்தால் நான் பூர்ணிமாவாகவும் அவர் பாக்யராஜாகவும் பிறக்க வேண்டும் என ஆசைப்படுறேன். அப்போது தான் அவர் எனக்குச் செய்த பணிவிடைகளை அவருக்கு நான் திரும்பச் செய்ய முடியும்," என்றார் பாக்யராஜ்.
அதைக் கேட்டு பூர்ணிமாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

