சக்கரவர்த்தி காலமானார்

சக்கரவர்த்தி காலமானார்

1 mins read
5b2c8368-57ca-40db-81b2-7687b0d766ed
-

பழம்­பெ­ரும் நடி­கர் சக்­க­ர­வர்த்தி நேற்று முன்­தி­னம் கால­மா­னார். அவ­ருக்கு வயது 62.

கடந்த 1980களில் தொடங்கி 80க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்­ளார் சக்­க­ர­வர்த்தி.

அவற்­றுள் 'சிகப்பு ரோஜாக்­கள்', 'ஆறி­லி­ருந்து அறு­பது வரை', 'முள்­ளில்­லாத ரோஜா', 'தர்­ம­யுத்­தம்', 'ராஜா­தி ­ராஜா' உள்­ளிட்ட படங்­கள் அடங்­கும்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரை­யு­ல­கில் இருந்து விலகி. மும்பை­யில் வசித்து வந்­தார்.

மேலும், தொலைக்­காட்சி நிகழ்ச்சி­க­ளுக்­காக பின்­ன­ணிக் குரல் கொடுக்­கும் பணி­யைச் செய்து வந்­த­வர், தமி­ழுக்கு மொழி மாற்­றம் செய்­யப்­படும் பிற­மொ­ழிப் படங்­க­ளுக்­கும் 'டப்­பிங்' பேசி­னார்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தினம் மார­டைப்பு கார­ண­மாக தூக்­கத்­தி­லேயே அவ­ரது உயிர் பிரிந்­ததாக குடும்பத்தார் தெரிவித்தனர். சக்கரவர்த்திக்கு மனை­வி­யும் இரு மகன்­களும் உள்­ள­னர். அவரது மறைவுக்கு திரை உலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.