பிரியா: எப்போதுமே அமைதி உதவாது

பிரியா: எப்போதுமே அமைதி உதவாது

3 mins read
e3fd94fa-1f8f-4b0c-af9f-fb9cdab2e131
-

நாய­கியை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் கதை­களைத் தேர்வு செய்து நடிக்­கும் அள­வுக்கு திரை­யு­ல­கில் தாம் இன்­னும் வளர்ச்சி காண­வில்லை என நடிகை பிரியா பவானி சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், திரை­யு­லக வியா­பா­ரச் சந்­தை­யில் நாய­கி­க­ளுக்­கான மதிப்பு இன்­னும் அதி­க­ரிக்­க­வில்லை என்­பதே தாம் நாயகி­களை மையப்­ப­டுத்­தும் கதை­க­ளைத் தவிர்ப்­ப­தற்கு கார­ணம் என்­றும் பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அண்­மைக் கால­மாக நாய­கியை மட்­டுமே முன்னிலைப்படுத்தி உரு­வா­கும் படங்­க­ளின் எண்­ணிக்கை மெல்ல அதி­க­ரித்து வரு­கிறது. இதை நானும் கவ­னித்­தேன். அது­போன்ற கதை­களில் நடிக்க வேண்­டும் என்­றால், முத­லில் நாம் அதற்குத் தகு­தி­யுள்ள இடத்­துக்கு வலு­வாக வர வேண்­டும். நாம் நடிக்­கும் படங்­கள் கடைக்­கோடி ரசி­கர்­கள் வரை சென்­ற­டை­யும் என நம்­பிக்கை தேவை. இல்­லை­யெ­னில் நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­கள் சரி­வர ஓடாது. நானே பார்த்­தால்­தான் உண்டு.

"அதே­ச­ம­யம் வணி­கப் படங்­களில் நடிக்­கும்­போது, சம்­பந்­தப்­பட்ட தயா­ரிப்பு நிறு­வ­னமே அவற்றை நன்­றாக விளம்­ப­ரப்­ப­டுத்­தும்.

"மேலும், வணி­கப் படம் ஏரா­ள­மான ரசி­கர்­க­ளி­டம் நம்­மைக் கொண்­டு­போய்ச் சேர்க்­கும். எனி­னும் வணி­கப் படங்­க­ளி­லும்­கூட எனக்­கான கதா­பாத்­தி­ரங்­கள் நன்­றாக அமை­கின்­றன.

"திரை­யு­ல­கில் அறி­மு­க­மான புதி­தில் நிறைய நல்ல படங்­களை இழந்­தி­ருக்­கி­றேன். அப்­போது எனக்கு எது சரி­யான வழி என்று சொல்­லிக் கொடுக்க யாரு­மில்லை.

"இப்­போது ஓர­ளவு அனு­ப­வம் வந்­து­விட்­ட­தால் நிறைய கற்­றுக் கொண்­டுள்­ளேன். பெரிய நாய­கர்­க­ளின் படங்­களில் நடிக்­கும் வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன," என்­கி­றார் பிரியா பவானி சங்­கர்.

தற்­போது, அதர்­வா­வு­டன் 'குருதி ஆட்­டம்', சிம்­பு­வு­டன் 'பத்து தல', அருண் விஜய்­யு­டன் 'யானை' என நிறைய படங்­களில் நடித்து வரு­ப­வர், அசோக் செல்­வ­னு­டன் இணைந்து நடித்­துள்ள 'ஹாஸ்­டல்' பட வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

மலை­யா­ளத்­தில் வெற்­றி­பெற்ற 'அடி கப்­யாரே கூட்­டா­மணி' என்ற படத்­தின் மறு­ப­திப்­பு­தான் 'ஹாஸ்­டல்'.

பொது­வாக மறு­ப­திப்பு படங்­களில் நடிப்­ப­தில் பிரி­யா­வுக்கு அதிக ஆர்வம் இல்­லை­யாம். எனி­னும், தமிழ் ரசி­கர்­க­ளுக்கு ஏற்ற மாதிரி இந்­தப் படத்தை மாற்றி அமைத்­துள்­ளா­ராம் இயக்­கு­நர்.

"அத­னால்­தான் நடிக்க ஒப்­புக்­கொண்­டேன். அசோக் செல்­வன் நாய­க­னாக நடித்­தால் நன்­றாக இருக்­கும் என்­றார் இயக்­கு­நர். ஆனால் கால்­ஷீட் பிரச்­சி­னை­யால் அவர் மறுத்­து­விட்­டார். ஆனால் நான் விட­வில்லை. நானே அவ­ரைத் தொடர்­பு­கொண்டு பேசி, நடிக்க வைத்தேன். நட்­புக்­காக அவர் இதைச் செய்தார்.

"இதற்கு முன்பு சில படங்­களில் நானும் அவ­ரும் இணைந்து நடிப்­ப­தாக இருந்­தது. ஆனால் சில காரணங்­க­ளால் அது நடக்­க­வில்லை.

"இப்­போது 'ஹாஸ்­டல்' அந்த மனக்­கு­றை­யைப் போக்­கி­யுள்­ளது. அவர் மிக­வும் நல்ல மனி­தர், நல்ல நண்­பர்," என்று சொல்­லும் பிரியா, இளம் நாய­கி­கள் அறி­வுபூர்­வ­மா­க­வும் யோசித்து படங்­க­ளைத் தேர்வு செய்ய வேண்டும் என்­கி­றார்.

அண்­மை­யில் இணை­யம் வழி ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­போது, ஆபா­ச­மாக எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அதி­ர­டி­யாக பதி­லடி கொடுத்­தார் பிரியா. அது­போன்ற தரு­ணங்­களில் தயங்­கா­மல் பதி­லடி தர வேண்­டும் என்­கி­றார்.

"அரு­வருப்­பான பதி­வு­க­ளுக்கு பதில் அளிப்­பதை தவிர்ப்­போம். ஆனால் சில சம­யங்­களில் அது­போன்ற கருத்­து­களை எதிர்த்து பேச வேண்­டும் என்று தோன்­றும். எல்லா நேரத்­தி­லும் நாம் அமை­தி­யாக இருக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. அது வாழ்க்கையில் உதவவும் செய்யாது," என்­கி­றார் பிரியா பவானி சங்­கர்.