ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இயக்குநருக்கு கதாநாயகன் பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசளிப்பது வழக்கம். நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு தினமும் ஒரு புதுக்காரில் வந்திறங்குவாராம்.
தமிழ், தெலுங்கு நடிகர்கள் பலர் வெளிநாட்டு கார்களை வைத்துள்ளனர்.
ஆனால் பல வெற்றிப் படங்களை அளித்துள்ள ராஜமௌலி ரூ.44 லட்சம் மதிப்புள்ள புதுக் காரை தாமே சொந்தமாக வாங்கி உள்ளார்.
சம்பந்தப்பட்ட கார் நிறுவனம், புதுக்காரின் சாவியை அவரிடம் ஒப்படைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட, "இதுபோன்ற எளிமையான சாதனையாளரைப் பார்த்ததே இல்லை," என்று ஏராளமான ரசிகர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

