விஜய்யின் அடுத்த படத்தில் அவரது அண்ணனாக நடிக்க ஷாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் ஷாம் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 'குஷி' படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார் ஷாம்.
விஜய்க்கு அண்ணனாக முன்னாள் நடிகர் மோகன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும் இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்நிலையில் ஷாமை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
*** ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப்குமார் என்று கூறப்படும் நிலையில், அவர் தனுஷுடன் இணைய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தனது 169வது படம் குறித்து நெல்சனுடன் கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனுஷும் நெல்சனுடன் பேசிக்கொண்டிருக்கிறாராம்.
தற்போது 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷிடம் அவருக்கு ஏற்ற மாதிரியான கதையை நெல்சன் கூறியதாகத் தெரிகிறது.
அது பிடித்துப் போனதால், அவருடன் இணைய தனுஷ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.

