'சாணிக் காயிதம்' படம், ஒரு பெண் தனது எதிரிகளைப் பழிவாங்கும் கதையாக உருவாகி உள்ளது என்கிறார் அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
மேலும், இந்தப் படம் மனதை உலுக்கும் ஓர் அழுத்தமான படைப்பாக உருவாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"ஒருவருடைய வாழ்க்கையை அழித்தவர்களை சிறையில் தள்ளுவதல்ல பழிவாங்கல், அழித்தவர்களை அழிப்பதே பழிவாங்கல் என்ற மனநிலை கொண்ட ஒரு பெண்ணின் கதை இது. அதிரடிக் காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும் படைப்பாக உருவாகி உள்ளது.
"ஒரு பெண் எதிரிகளைப் பழிவாங்குவதை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் திரையில் காட்சிப்படுத்தி உள்ளேன். மொத்தத்தில் இப்படம் ரசிகர்களைக் கவரும்," என்கிறார் அருண் மாதேஸ்வரன்.
இவர் இதற்கு முன் 'ராக்கி' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

