'கண்ணியமான கதாநாயகன்'

'கண்ணியமான கதாநாயகன்'

1 mins read
6fa9741e-3f6c-4127-972e-86fb63b583de
-

செல்­வ­ரா­க­வன் இயக்­கத்­தில் தனுஷ் நாய­க­னாக நடித்­துள்ள 'நானே வரு­வேன்' படத்­தில் சுவீ­ட­னைச் சேர்ந்த எல்லி அவ்­ரம் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், அவர் இணை­யம் வழி ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி­னார்.

அப்­போது தனு­ஷைப் போன்ற கனி­வான, கண்­ணி­ய­மான சக நடி­கரை இது­வரை தாம் பார்த்­த­தில்லை எனக் குறிப்­பிட்­டார்.

மேலும், செல்­வ­ரா­க­வனை பார்த்து தாம் வியந்து போன­தா­க­வும் அவர் ஓர் அனா­யாச­மான இயக்­கு­நர் என்­றும் பாராட்டு தெரி­வித்­தார்.

'கண்­பத்', 'குட்பை' படங்களைத் தொடர்ந்து புதுப்­ப­டம் ஒன்­றில் ஒப்­பந்­த­மாகி உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்­திய திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னதை மிகச்­சி­றந்த வாய்ப்­பாக கரு­து­வ­தா­கக் கூறி­னார்.

"படப்­பி­டிப்­பின்­போது தனுஷ் எதற்­கா­க­வும் பதற்­றம் அடை­ய­ மாட்­டார். அவர் நிபு­ணத்­து­வம் வாய்ந்த திற­மை­யான நடி­கர். அவ­ரு­டன் நடித்த நாள்­கள் மறக்க முடியாதவை," என்­கி­றார் எல்லி.

'நானே வரு­வேன்' படம் மிக விரை­வில் திரை காண உள்­ளது. நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு இந்­தப் படத்­தின் மூலம் செல்வராக­வ­னும் தனு­ஷும் இணைந்­துள்­ள­னர்.

படப்பிடிப்பின்போது செல்வராகவன், தனுஷுடன் எல்லி.