'பீஸ்ட்' படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும், வசூல் ரீதியில் சாதித்திருக்கிறது. திரையுலகில் விமர்சனங்கள் எப்படியாக இருந்தாலும், ஒரு படத்தின் வசூலை வைத்தே அதில் நடித்த கதாநாயகனின் சந்தை மதிப்பு உயரும்.
அந்த வகையில் 'பீஸ்ட்' சாதித்திருப்பதால், அப்படக்குழுவினருக்கு சென்னையில் விருந்து அளித்து மகிழ்ந்துள்ளார் விஜய். அதில் இயக்குநர் நெல்சன், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் நெல்சன். மேலும், விருந்து வழங்கிய விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"இது 'பீஸ்ட்' படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த, மறக்கமுடியாத மாலை நேரமாக அமைந்தது. விஜய்யின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணியாற்றியது சிறப்பான தருணம். உண்மையிலேயே அதற்காகப் பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் உண்மையாக மதிப்பேன்.
"உங்களின் (விஜய்) அழகும் கவர்ச்சியும் இந்தப் படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. எங்களின் அற்புதமான நடிகர்கள், படக்குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. தடைகளைத் தகர்த்தெறிந்து அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

