ஜீவா: நல்ல குருநாதர் தேவை

ஜீவா: நல்ல குருநாதர் தேவை

3 mins read
6ba122fd-316e-419a-9624-65e51ece8391
-

எந்­தத் துறை­யாக இருப்­பி­னும் அனை­வ­ருக்கும் ஒரு வழிகாட்டியாக­ குரு­வும் தேவை என்­கி­றார் நடி­கர் ஜீவா.

சென்­னை­யில் உள்ள தனி­யார் கல்­லூரி ஒன்­றில் நடை­பெற்ற கலை விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு பேசிய அவர், தமக்கு திரை­யு­ல­கில் நல்ல குரு­நா­தர்­கள் அமைந்­த­தா­கக் குறிப்­பிட்­டார். இந்த நிகழ்ச்­சியில் நடி­கர் நாச­ரும் கலந்துகொண்­டார்.

"திரை­யு­ல­கில் எனது முதல் குரு என்று சொன்­னால் அது நாசர் அவர்கள்தான். இன்று இந்த மேடையை அவ­ரு­டனும் பகிர்ந்து கொண்­டி­ருப்­ப­தற்கு நான் பெரு­மைப்­ப­டு­கிறேன். நீங்­கள் எனக்­குக் கற்­பித்த அனைத்து சிறந்த பாடங்­க­ளுக்­கும் நன்றி சார். இந்த இடத்­தில் உங்­க­ளுக்கு நன்றி சொல்­வதை ஒரு சிறந்த வாய்ப்­பாக எண்­ணு­கி­றேன்.

"திரு.நாசரை மேடை­யில் பார்த்­த­தும் நான் பேச நினைத்­ததை மறந்­து­விட்­டேன். அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­தற்கு பெருமைப்­படு­கி­றேன். அவர்தான் எனக்கு வழி­காட்டி. என்­னு­டைய முதல் படத்­தி­லேயே எனக்கு மாம­னா­ராக நடித்­தி­ருந்­தார். அப்­போது நான் ஒரு தயா­ரிப்­பா­ள­ரின் மக­னாகத்தான் அறி­மு­க­மா­னேன்.

"ஒரு­நாள் படப்­பி­டிப்­பின்­போது அவர் என்­னைப் பார்த்து 'தயா­ரிப்­பா­ளர் மகன் என்­றால் நடிக்க வந்துவிடு­வாயா?' என்று வின­வி­ய­தோடு, நான் ஏன் நடிக்க வந்தேன் என்­றும் கேட்­டார். அந்த எளி­மை­யான கேள்­விக்கு என்­னி­டம் இது­நாள் வரை பதில் இல்லை," என்று சொல்­லிச் சிரித்­தார் ஜீவா.

கடந்த சில ஆண்­டு­க­ளாக திரை­யரங்கு­களில் ரசி­கர் கூட்­டம் குறைந்­து­விட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், கல்­லூரி நிகழ்­வில் பெருந்­தி­ர­ளான மாண­வர்­கள் பங்­கேற்­றுள்­ள­தைப் பார்க்க மகிழ்ச்­சி­யாக உள்­ளது என்­றார்.

மாண­வர்­கள் எப்­போ­தும் உத்­வே­கத்­து­டன் இருக்கவேண்­டும் என்­றும் பிற­ரை­யும் ஊக்­கு­விக்க வேண்­டும் என்­றும் குறிப்­பிட்ட அவர், வாழ்க்­கைக்­கான பல மேற்­கோள்­கள் தம்­மி­டம் உள்­ளன என்­றார்.

"உங்­க­ளி­டம் பணம் இருக்­க­லாம். பல விஷ­யங்­களை நீங்­கள் தெரிந்து வைத்­தி­ருக்­க­லாம். ஆனால் உங்­க­ளி­டம் இருக்­கும் சிறந்த ஆற்­ற­லைத்­தான் நான் மதிப்­பு­மிக்க விஷ­ய­மா­கக் கரு­து­கி­றேன். சிறந்த ஆற்­றல் உள்­ள­வர்­க­ளால் எதை­யும் சாதிக்க முடி­யும்," என்­றார் ஜீவா.

மாண­வர்­கள் தங்­கள் ஆற்­றலை ஆக்­கத்­திற்­கா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் எதை­யும் அழிப்­பது நம் வேலை­யல்ல என்­றும் குறிப்­பிட்ட அவர், அனை­வ­ரும் நம்மை நேசிக்கவேண்­டும் என எதிர்­பார்ப்பது சரி­யல்ல என்­றார்.

"கிரிக்­கெட் வீரர் சச்­சின் சொல்­வது போல், என்­னு­டைய சிறந்த படங்­கள் இன்­னும் வர­விருக்­கின்­றன. முந்­தைய படங்­களைவிட வர­வி­ருக்­கும் படங்­க­ளின் மூலம் உங்­களை மேலும் மகிழ்­விக்க உள்­ளேன்," என்­றார் ஜீவா.

இதை­ய­டுத்து பேசிய நடி­கர் நாசர், ஜீவா­வுடன் மேடை­யைப் பகிர்ந்துகொள்­வ­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"அப்­பா­வும் மக­னும் ஒரே மேடை­யில் அமர்ந்­தி­ருப்­பது போன்­று­தான் உணர்­கி­றேன். ஜீவா­வின் முதல் படத்­தின் படப்­பி­டிப்­பின்­போது என்­னைப் பார்க்க வந்­தார். அவரை நான் வாழ்த்­து­வேன் என்று எதிர்­பார்த்­தார். ஆனால், நான் "தயா­ரிப்­பா­ள­ரின் மகன் என்­றால் நடிக்க வந்­து­வி­டு­வீர்­களா?" என்று கேட்­டேன். அவருக்கு கடும் அதிர்ச்சி.

"அதன் பின் அவ­ருக்கு சில அறி­வு­ரை­கள் கூறி­னேன். சில புத்­த­கங்­க­ளைப் படிக்­கச் சொன்­னேன். அவர் அது எதை­யும் மதிக்­கா­மல் இருந்­தி­ருக்­க­லாம். ஆனால் அனைத்­தை­யும் செய்­தார். இன்று அவர் ஒரு பெரிய நடி­க­னாக இருப்­ப­தில் நான் மிக­வும் மகிழ்ச்சி அடை­கி­றேன்'' என்­றார் நாசர்.

, :   