'நல்ல படைப்புகள் வேண்டுமென்றால் புது இயக்குநர்கள் தேவை'

'நல்ல படைப்புகள் வேண்டுமென்றால் புது இயக்குநர்கள் தேவை'

1 mins read
d040abc3-f9a2-4fc1-bcd6-110b76c8930b
'அக்கா குருவி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

நல்ல படைப்­பு­கள் வெளி­வர வேண்­டும் என்­றால் வித்­தி­யா­ச­மாக சிந்­திக்­கக்­கூ­டிய புதிய இயக்­கு­நர்­கள் வர வேண்­டும் என்­றார் இளை­ய­ராஜா.

இயக்­கு­நர் சாமி இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள குழந்­தை­க­ளுக்­கான திரைப்­ப­டம் 'அக்­கா­கு­ருவி'. இளை­ய­ராஜா இசை­ய­மைத்­துள்­ளார்.

இப்­ப­டம் மிக நேர்த்­தி­யாக, நல்ல படைப்­பாக உரு­வாகி உள்­ளது என அவர் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

"நான் பல உலக சினி­மாக்­கள் பார்ப்­பது வழக்­கம். அதில் எனக்கு ஆர்­வம் அதி­கம். அப்­படி 'சில்ட்­ரன் ஆப் ஹெவன்' என்ற படத்­தைப் பார்த்து வியந்­தேன்.

"சிறு குழந்­தை­க­ளின் உல­கத்தை, ஒரு சின்ன பிரச்­சி­னையை அவர்­கள் எப்­ப­டிச் சமா­ளிக்­கி­றார்­கள் என்­பதை மிக யதார்த்­த­மாக, அற்­பு­த­மான படைப்­பாக தந்­துள்­ள­னர். இது­போன்ற படங்­கள் தமி­ழில் ஏன் வரு­வ­தில்லை என வருத்­த­மாக இருந்­தது. ஆனால் இயக்­கு­நர் சாமி அதே படத்தை நம் ஊரில் எடுத்­தால் எப்­படி இருக்­கும் என யோசித்து, அந்தக் கதையை மாற்றி, ஆங்­கி­லத்­தை­விட தமி­ழில் சுவா­ர­சி­ய­மாக பட­மாக்கி உள்­ளார்.

"மணி­ரத்­னம் இயக்­கிய முதல் படத்­திற்கு நான் இசை­ய­மைத்த கார­ணம் அது­தான். புதிய இயக்­கு­நர்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வர வேண்­டும்," என்­றார் இளை­ய­ராஜா.

, :   