திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
5a946725-5da1-4976-b96d-773b3c6b59d1
-
multi-img1 of 2

 சில விஷயங்கள் தொடர்பில் தாம் கவனம் காப்பதை தமது அறியாமையாகக் கருதிவிட வேண்டாம் என்கிறார் சமந்தா. மேலும், கருணையுடன் தாம் செயல்படுவதை தமது பலவீனமாகக் கருதிவிடக் கூடாது என்றும் தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார். "சில சமயங்களில் நாம் பிறர் மீது கருணை காட்டுகிறோம். ஆனால், அந்த கருணையும்கூட ஒரு கட்டத்தில் காலாவதியாகக்கூடும்," என்று சமந்தா தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாலேயே சமந்தாவை அவரது கணவர் நாக சைதன்யா பிரிந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதைக் குறிப்பிட்டு சமந்தாவை விமர்சித்துள்ளனர். இதனால் அவர் கோபமடைந்து மேற்குறிப்பிட்டவாறு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 தாம் நடிக்கும் படங்களில் தமக்கான கதாபாத்தி ரங்களை தேர்வு செய்வது தொடர்பில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.

எந்த நிலையிலும் அவற்றைத் தாம் மீறுவதே இல்லை என்கிறார். "திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நாள் முதல் என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறேன். அதிர்ஷ்டம் காரணமாக இதுவரை நான் ஏற்றுக்கொண்ட அனைத்து கதாபாத்திரங்களுமே என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்தன. "கவர்ச்சியாக நடிக்கும் விஷயத்தில் எனக்கென சில எல்லைகளை வைத்து இருக்கிறேன். முந்தைய படங்களில் எவ்வாறு திரையில் காட்சி அளித் தேனோ, அதை தொடர்ந்தால் மட்டுமே ரசிகர்கள் என்னை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.