வெளியீடு காண வரிசையில் காத்திருக்கும் படங்கள்

அடுத்த மே மாதம் தொடங்கி, இந்த ஆண்டு இறுதி வரை பல முக்­கிய திரைப்­ப­டங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யீடு காண உள்­ளன. இத­னால் தமிழ்த் திரை­யு­ல­கி­னர் மத்­தி­யில் உற்­சா­கம் நில­வு­கிறது.

பல்­வேறு பிரச்­சி­னை­க­ளால் வெளி­யீடு காணா­மல் இருந்த படங்­களும் வெளி­யாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பணப்­பி­ரச்­சினை, கருத்து வேறு­பாடு, கதை திருட்டு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­கள்­கூட திரை­காண்­ப­தில் சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ளன.

கொரோனா நெருக்­கடி முடி­வுக்கு வந்­தி­ருப்­ப­தால், இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காண்­ப­தில் திரை­யு­ல­கத்­தி­னர் மும்­மு­ர­மாக உள்­ள­னர்.

உத­ய­நிதி நடித்­துள்ள 'நெஞ்­சுக்கு நீதி', ஜி.வி.பிர­கா­சின் 'ஐங்­க­ரன்', செல்­வ­ரா­க­வன், கீர்த்தி சுரேஷ் நடித்­துள்ள 'சாணிக் காயி­தம்', சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'டான்', சுந்­தர்.சி யின் 'பட்­டாம் பூச்சி', ஆர்.கே.சுரே­சின் 'விசித்­தி­ரன்' ஆகிய படங்­கள் வரி­சை­யாக வெளி­யீடு காண உள்­ளன.

கமல்­ஹா­சன் நடித்­துள்ள 'விக்­ரம்', அருண் விஜய்­யின் 'யானை', ஆர்.ஜே.பாலா­ஜி­யின் 'வீட்ல விசே­ஷம்', விஜய்­சே­து­ப­தி­யின் 'மாம­னி­தன்' ஆகிய படங்­கள் ஜூன் மாத­மும் மாத­வன் இயக்கி நடித்­துள்ள 'ராக்­கெட்ரி', தனுஷ் நடித்­துள்ள 'திருச்­சிற்­றம்­ப­லம்', லிங்­கு­சாமி இயக்­கிய 'தி வாரி­யர்' ஆகிய படங்­கள் ஜூலை மாத­மும் வெளி­யீடு காண உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­துள்ள 20வது பட­மும் சமந்­தா­வின் 'யசோதா' பட­மும் ஆகஸ்டு மாதம் திரை­காண்­பது உறுதி எனக் கூறப்­ப­டு­கிறது.

மணி­ரத்­னம் இயக்­கத்­தில் விக்­ரம், கார்த்தி, ஐஸ்­வர்யா ராய், திரிஷா உள்­ளிட்­டோர் நடித்­துள்ள 'பொன்­னி­யின் செல்­வன்' படம் செப்­டம்­பர் மாதம் வெளியாகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!