சமையல் கலைஞராக நடிக்கும் அனுஷ்கா

சமையல் கலைஞராக நடிக்கும் அனுஷ்கா

1 mins read
b2db193f-3309-4410-9efa-c9210073ef66
-

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு அனுஷ்கா நாய­கி­யாக நடிக்­கும் புதிய படம் குறித்த தக­வல்­கள் தெரிய வந்­துள்­ளன.

மகேஷ் என்­ப­வர் இயக்­கும் படத்­தில் அவர் நடிக்க உள்­ளார். இதில் நவீன் பொலி­ஷிட்டி நாய­க­னாக நடிக்க, தமன் இசை­ய­மைக்க உள்­ளார்.

இந்­தப் படத்­தில் முதல் முறை­யாக உலக அள­வில் புகழ்­பெற்ற சமை­யல் கலை­ஞர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார் அனுஷ்கா.

காத­லுக்­கும் நகைச்­சு­வைக்­கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் இந்­தக் கதை­யைக் கேட்­ட­துமே நடிக்க ஒப்­புக்­கொண்டு விட்­டா­ராம். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­க­ளி­லும் தயா­ரா­கும் இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு மே முதல் வாரம் தொடங்­கு­கிறது.

இந்­தப் புதுப் படத்­துக்­காக அனுஷ்கா தனது உடல் எடை­யைக் கணி­ச­மாக குறைத்­துள்­ளா­ராம். மேலும் தனது முகப்­பொ­லி­வை­யும் கூட்டி இருப்­ப­தா­கத் தக­வல்.