'விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை'

'விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை'

3 mins read
11439c1d-c276-417e-a9ee-205264c11b57
-

நடிகை என்ற முறையில் தாம் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்தை நன்கு அனு­ப­வித்து நடிப்­ப­து­தான் தமது வழக்­கம் என்­கி­றார் ரெஜினா கெஸாண்ட்ரா.

தம்­மைப் பெண்­ணி­ய­வாதி என்று கூறிக்­கொள்­ளும் நிலை­யில், கவர்ச்­சி­யாக நடிப்­ப­தில் தமக்கு எந்­த­வி­தத் தயக்­க­மும் இல்லை என்­றும் அது தம்மை பாதிக்­காது என்­றும் பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்­வேறு மொழி­களில் நடித்து வரு­கி­றார் ரெஜினா.

அண்­மை­யில் தெலுங்கு நடி­கர் சிரஞ்­சீ­வி­யு­டன் இணைந்து நட­ன­மா­டிய பாடல் பெரும் வர­வேற்பு பெற்­றுள்­ளது. எனி­னும் ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மாடி இருப்­பது குறித்து ரெஜி­னாவை ரசி­கர்­கள் பலர் குறை­கூறி உள்­ள­னர்.

இ்து குறித்து அவர் தற்­போது விளக்­கம் அளித்­துள்­ளார்.

"தொடர்ந்து நிறை­யப் படங்­களில் நட­னம் ஆட வாய்ப்­பு­கள் வரு­கின்­றன. ஆனால், ஒரே மாதி­ரி­யான கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­பது அல்­லது பாடல்­களில் நட­னமா­டு­வது ஒரு வகை­யான பிம்­பத்தை உரு­வாக்­கும் என்­ப­தால் தற்­போது அவற்­றைத் தேர்வு செய்­வ­தில்லை. கவர்ச்­சி­யான பாட­லாக இருந்­தா­லும் கொண்­டாட்­ட­மான பாட­லாக இருந்­தா­லும் இது எது­வும் ஒரு பெண்­ணி­ய­வா­தி­யான என் சித்­தாந்­தத்­தைப் பாதிப்­ப­தில்லை," என்று தமது பேட்­டி­யில் அவர் தெளி­வா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிரஞ்­சீ­வி­யு­டன் ஒரு பாட­லுக்கு நட­ன­மா­டும் வாய்ப்பு கிடைத்­த­தாம். அதன் பிறகு ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மா­டக் கேட்டு பல­ரும் தம்மை அணு­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு படத்­தில் நட­னம் ஆடி­னேன் என்­றால், அதே­போல் ஏன் இன்­னொரு படத்­திலும் அதைச் செய்ய முடி­யாது என்று தயா­ரிப்­பா­ளர்­கள் நினைக்­கி­றார்­கள். இது ஒரே மாதி­ரி­யான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கும் பிம்­பத்தை உரு­வாக்­கு­கிறது என்­ப­தால் அவற்­றைத் தவிர்க்­கி­றேன்.

"எந்த விஷ­யத்­தைச் செய்­தால் என் எதிர்­கா­லம் நன்­றாக இருக்­குமோ அதைச் செய்­வேன். சிரஞ்­சீ­வி­யு­டன் நட­னம் ஆடு­வது எனது விருப்­பப்­பட்­டி­ய­லில் இருந்த ஒரு விஷ­யம். அத­னால் அதைச் செய்­தேன்," என்­கி­றார் ரெஜினா.

ஒரு பாட­லுக்­காக கவர்ச்­சி­யாக நடிப்­ப­தும் குத்­தாட்­டம் போடு­வ­தும் தவறு இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், இதன் கார­ண­மாக எழும் விமர்­ச­னங்­கள் குறித்து தாம் கவ­லைப்­ப­ட­வில்லை என்­கி­றார்.

"பல்­வேறு விமர்­ச­னங்­கள் எழுந்­தா­லும் அதற்­கெல்­லாம் நான் கோபப்­ப­டு­வது இல்லை. அதே­போல் மோச­மான விமர்­ச­னங்­கள் குறித்­தும் கவ­லைப்­ப­டு­வ­தில்லை.

"நடிகை என்று ஆன­பி­றகு, நாம் எதைச் செய்­தா­லும் சிலர் கேள்­வி­க­ளைக் கேட்­கத்­தான் செய்­வார்­கள். அவர்­க­ளு­டன் மோது­வ­தால் எந்­தப் பய­னும் இல்லை.

"எல்­லா­வற்­றை­யும் நாம் கேள்வி கேட்­கத் தொடங்­கும்போது, நமக்­குப் பதில் இல்­லா­மல் போய்­வி­டும்.

"ஒரு பாட­லுக்கு நட­ன­மா­டு­வது, வலி­மை­யான பெண்­ணாக நடிப்­பது அல்­லது திரை­யில் கொலை செய்­வது என ஒவ்­வொரு காட்­சி­யை­யும் ஒரு நடி­கை­யாக ரசிப்­பேன்.

"இது அனைத்­தும் கலை­யின் ஒரு பகுதி. ஒரு நடி­கை­யாக, நான் பல விஷ­யங்­க­ளைச் செய்­யப் போகி­றேன் என்று என்­னைப் பற்றி நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன்," என்­கி­றார் ரெஜினா.

தாம் நடித்த சில படங்­கள் வசூல் ரீதி­யில் வெற்றி பெற­வில்லை என ஒரு தரப்­பி­னர் சுட்­டிக்­காட்­டு­வதை தாம் நன்கு அறிந்­துள்­ள­தாக குறிப்­பி­டு­ப­வர், வசூல் சரி­யாக இல்லை என்­ப­தால் ஒரு படைப்பை தர­மற்­றது என்று ஒதுக்­கி­விட முடி­யாது என்­கி­றார்.

தமிழில் தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் ரெஜினா, மேலும் சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்.