வெற்றி விழாவில் அடுத்த படத்துக்கு முன்பணம்

வெற்றி விழாவில் அடுத்த படத்துக்கு முன்பணம்

1 mins read
7ae1403f-3880-4f43-89c7-5ba31c240af9
'செல்ஃபி' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா. -

ஜி.வி.பிர­காஷ், வர்ஷா பொல்­லம்மா இணைந்து நடித்­துள்ள 'செல்ஃபி' படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து, படக்­கு­ழு­வி­னர் பங்­கேற்ற வெற்றி விழா சென்­னை­யில் நடை­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்ட தயா­ரிப்­பா­ளர் தாணு, படத்­தின் இயக்கு­ந­ருக்கு மட்­டு­மல்­லா­மல் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ருக்­கும் தொழில் மீதான பக்தி அதி­கம் இருந்­தது என்று குறிப்­பிட்­டார்.

"செல்ஃபி' என்ற தலைப்பை வைத்து படம் இயக்­கப் போவ­தாக இயக்­கு­நர் மதி­மா­றன் என்­னி­டம் ஒப்­பு­தல் கேட்­ட­தும் சரி என்­றேன். இந்­தப் படத்தை நான் தயா­ரிக்க வேண்­டும் என்ற எண்­ணம் தொடக்­கத்­தி­லேயே ஏற்­பட்­டது. வெறும் 38 நாள்­களில் இப்­ப­டத்தை இவ்­வ­ளவு சிறப்­பாக எடுத்­த­தற்கு மதி­மா­றனை நிறைய பாராட்­ட­லாம். ஜி.வி.பிர­காஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. 'செல்ஃபி' படத்­தில் அவ­ரது நடிப்பு மிகச் சிறப்­பாக இருந்­தது. அவர் இன்­னும் உய­ரிய இடத்­துக்­குப் போகவேண்­டும்.

"தம்பி குணா­நி­தி­யும் திற­மை­யாக நடித்­தி­ருக்­கி­றார். முதல் படம் என்று சொல்லமுடி­யாத அள­விற்கு நடித்­தி­ருக்­கி­றார்.

"கௌதம் மேனன் இந்­தப் படத்­தில் சிறப்­பாக நடித்­துள்­ளார். அவர் நடிக்கவேண்­டும் என்று தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு கேட்ட உட­னேயே ஒப்­புக்­கொண்­டார். மதிமாறனையும் வெகுவாகப் பாராட்டினார்.

"இயக்­கு­நர் மதி­மா­றன் அடுத்து நான் தயா­ரிக்­கும் படத்தை இயக்க வேண்­டும் என்­ப­தற்­காக இப்­போதே அவ­ருக்கு பத்து லட்­சம் முன்­ப­ணத்­தைக் கொடுக்­கப் போகி­றேன்," என்று தயா­ரிப்­பா­ளர் தாணு அறி­வித்­த­போது, படக் குழு­வி­னர் ஆர­வா­ரம் செய்­த­னர்.