ரஜினியின் 169வது படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
1999ல் வெளியாகி வெற்றிபெற்ற 'படையப்பா' படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். அதில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது.
இந்நிலையில், செல்சன் ரஜினிக்காக உருவாக்கி உள்ள கதையில், ஒரு வலுவான எதிர்மறை கதாபாத்திரம் உள்ளதாம். அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நெல்சன் கூறியதை ரஜினி ஏற்றுக்கொண்டதை அடுத்து, பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

