'அஜித்துக்கு நான் வில்லன் அல்ல'

'அஜித்துக்கு நான் வில்லன் அல்ல'

1 mins read
92f4f2b8-a569-4daa-bac8-42f7310c04b1
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் ஒரு காட்சி. -

அஜித்­தின் 62வது படத்­தில் அவ­ருக்கு வில்­ல­னாக நடிப்­பீர்­களா என்ற கேள்­விக்கு விஜய் சேது­பதி பதி­ல­ளித்­துள்­ளார்.

விக்னேல் சிவன் இயக்­கத்­தில் உரு­வான 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' வெளி­யாகி உள்ள நிலை­யில், அஜித்­தின் 62வது படத்தை இயக்­கு­வ­தற்­கான பணி­க­ளைத் தொடங்கி உள்­ளார்.

இந்­தப் புதிய படத்­தில் அஜித்­துக்கு ஜோடி­யாக நயன்­தாரா நடிப்­ப­தும் அனி­ருத் இசை­ய­மைப்­ப­தும் உறு­தி­யாகி உள்­ளது. லைகா நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தப் படத்­தில் அஜித்­துக்கு வில்­ல­னாக விஜய் சேது­பதி நடிப்­ப­தாக தக­வல் வெளி­யா­னது. இது குறித்து அவ­ரி­டமே ரசி­கர் ஒரு­வர் நேர­டி­யாக கேள்வி எழுப்­பி­னார். அதற்கு பதி­ல­ளித்த விஜய் சேது­பதி, தாம் இது குறித்து விக்­னேஷ் சிவ­னி­டமே கேட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

"நான்­தான் உங்­கள் படத்­தில் வில்­லனா என்று கேட்­ட­தற்கு, 'என் கதா­நா­ய­கனை வில்­ல­னாக்க மாட்­டேன்' என்று அவர் கூறி­விட்­டார்," என விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

இதன் மூலம் அவர் அஜித்­துக்கு வில்­ல­னாக நடிக்க மாட்­டார் என்­ப­தும் உறு­தி­யாகி உள்­ளது.

இதற்­கி­டையே, 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' படத்­தைப் பார்த்த திரை­யு­ல­கப் பிர­மு­கர்­கள் பல­ரும், படம் நன்­றாக இருப்­ப­தா­கப் பாராட்­டி­ய­தா­கத் தக­வல்.