திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
922ab157-3183-4fef-81aa-774c95f16d43
-
multi-img1 of 3

 கடைத்திறப்பு நிகழ்வில் பங்கேற்க தெலுங்கானா மாநிலத்துக்குச் சென்ற அனுபமா பரமேஸ்வரன், அங்கு ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

விழாவுக்கு பங்கேற்க வந்த அவர், அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தபடியே சென்று கடையைத் திறந்து வைத்தார். எனினும், நிகழ்ச்சி முடிந்து தன் காரில் ஏறி புறப்பட முயன்றபோது ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

அவருடன் கைகுலுக்கவும் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அனுபமா காரில் ஏறினார்.

இதனால் கோபம் அடைந்த ரசிகர்களில் சிலர், காரின் டயரில் இருந்த காற்றைப் பிடுங்கிவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் ரசிகர்களை விரட்டியடித்து அனுபமாவை மீட்டு, வேறு காரில் அனுப்பி வைத்தனர்.

 வில்லன் நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.

'திருடா திருடா', 'வெற்றி விழா', 'சின்னக் கவுண்டர்', 'வேட்டைக்காரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார் சலீம்.

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சென்னையில் பிறந்த சலீம் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 உருவக்கேலி செய் பவர்கள் அதை நிறுத்த வேண்டும் என்று நடிகை மஞ்சிமா மோகன் வலியுறுத்தி உள்ளார்.

நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது என்றாலும், எல்லோருக்கும் அது சாத்தியமல்ல என்று தமது சமூக ஊடகப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சிலருக்கு சில கோளாறுகளால் உடல் எடை கூடி இருக்கலாம். எனவே உருவக்கேலி செய்வதை நிறுத்துங்கள். கேலி செய்வதன் மூலமாக ஒருவரது உடல் எடையைக் குறைத்துவிட முடியாது.

"கேலி செய்து அவர்களை வேதனைப்படுத்தாதீர்கள். நான் மற்றவர்களின் உடல், நிறம் பற்றி பேசுவது இல்லை. எல்லோரையும் மதியுங்கள், பாராட்டுங்கள். இல்லையேல் விட்டுவிடுங்கள். சங்கடப்படுத்த வேண்டாம்," என்று மஞ்சிமா தெரிவித்துள்ளார்.