விஜய்யின் 67வது படத்தில் அவருக்கு வில்லனாக இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் வெளியான 'கேஜிஎஃப்-2' படத்தில் வில்ல னாக மிரட்டியிருந்தார் சஞ்சய் தத். அப்படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் படத்தில் சஞ்சய் தத்தை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது.

