'இரு நல்ல உள்ளங்களின் கதை'

'இரு நல்ல உள்ளங்களின் கதை'

3 mins read
a778aeba-8088-4574-982e-29d6b1b76594
-

இரு நல்ல உள்­ளங்­க­ளின் வாழ்க்­கையை விவ­ரிக்­கும் படைப்­பாக உரு­வாகி வரு­கிறது 'நதி' திரைப்­ப­டம். அறி­முக இயக்­கு­நர்

தாம­ரைச்­செல்­வன் இயக்­கு­கி­றார்.

சாம் ஜோன்ஸ் நாய­க­னா­க­வும் 'கயல்' ஆனந்தி நாய­கி­யா­க­வும் நடிக்­கின்­ற­னர். இளை­யர்­க­ளைக் கவ­ரும் வகை­யில்

இந்­தப் படத்தை உரு­வாக்­கு­வ­தாக கூறு­கி­றார் இயக்­கு­நர்.

"'நதி' என்று தலைப்பு வைக்க கார­ணம் உள்­ளது. நதி தூய்­மை­யான இடத்­தில் உற்­பத்­தி­யாகி கடலை நோக்கி வந்­த­டைய வேண்­டும். வழி­யில் பல மேடு பள்­ளங்­க­ளைச் சந்­திக்­கும். சில சம­யம் தேங்கி நிற்­கும்.

"ஆனா­லும் ஒரு நதி கடலை அடை­வ­து­தான் அதன் இலக்­காக இருக்க முடி­யும். அது­போல என்­னு­டைய கதை­யில் வரும் இரண்டு தூய்­மை­யான கதா­பாத்­தி­ரங்­கள் சமூ­கத்­தால் சில பிரச்சி­னை­க­ளைச் சந்­திக்­கி­றார்­கள். அதைக் கடந்து அவர்­கள் தங்­கள் இலக்கை அடை­கி­றார்­களா என்­ப­து­தான் படத்­தோட ஒரு வரிக் கதை. அதை மன­தில் கொண்­டு­தான் இந்­தத் தலைப்பை வைத்­தோம்," என்­கி­றார் தாம­ரைச்­செல்­வன்.

அண்­மைக்­கா­ல­மாக திகில் படங்­கள்­தான் அதிக எண்­ணிக்­கை­யில் வெளி­வ­ரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இந்­தக் கார­ணத்­தால் இளை­யர்­க­ளைக் கவர வேண்­டும் என்ற முடி­வு­டன் இந்­தக் கதையை தயார் செய்­த­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தப் படம் இன்­றைய இளை­யர்­க­ளின் வாழ்க்கை முறை­யைப் பிர­தி­ப­லிப்­ப­தாக இருக்­கும். எனது கதை­யு­டன் சில உண்­மைச் சம்­ப­வங்­க­ளை­யும் சினி­மா­வுக்­கான மொழி­யில் மாற்­றிச் சொல்லி இருக்­கி­றோம்," என்று சொல்­லும் தாம­ரைச்­

செல்­வன், இந்­தப் படத்­தின் நாயகி பாத்­தி­ரத்­துக்கு ஆனந்­தி­யை­விட வேறு யாரும் பொருத்­த­மாக இருக்க முடி­யாது என்­கி­றார்.

ஆனந்­தி­யி­டம் கதை சொல்ல சென்­ற­போது, படப்­பி­டிப்பு முடிந்து அவர் வீடு திரும்ப இரவு பத்து மணி ஆகி­விட்­ட­தாம். அதன் பிறகு, இவர் சுமார் ஒன்­றரை மணி நேரம் கதையை விவ­ரித்­தி­ருக்­கி­றார். அதைப் பொறு­மை­யாக கேட்ட பிறகே நடிக்க சம்­ம­தித்­தா­ராம்.

"என்­னு­டைய நாய­கன் சாம் ஜோன்ஸ் புது­மு­கம் அல்ல. 'ஏமாளி', 'லிசா' போன்ற படங்­களில் நடித்­த­வர். அவர்­தான் இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர். நான் வைத்­தி­ருந்த கதை­யும் அவர் எதிர்­பார்த்­தி­ருந்த கதை­யும் பொருத்­த­மாக இருந்­த­தால் அவரே நாய­க­னாக நடிப்­பது என்­பது முடி­வா­னது. ஏற்­கெ­னவே நாய­க­னாக நடித்­தி­ருந்­தா­லும், இந்­தப் படம் அவரை வணி­கப் படங்­க­ளின் நாய­க­னாக அடை­யா­ளப்­ப­டுத்­தும். அதற்­காக தன்னை முழு­மை­யா­கத் தயார் செய்த பிறகே படப்­பி­டிப்­பில் கலந்­து­கொண்­டார்.

"உதா­ர­ணத்­துக்கு சொல்ல வேண்­டும் என்­றால், படத்­தின் ஒரு பகு­தி­யில் இற­குப் பந்து விளை­யாட்டு தொடர்­பான சில காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. அதற்­காக முறைப்­படி பயிற்சி மேற்­கொண்­டார். இந்­தப் படம் வெளி­யான பிறகு தமிழ் சினிமா இயக்­கு­நர்­க­ளின் கவ­னம் அவர் பக்­கம் திரும்­பும்.

"வளர்ந்து வரும் நாய­கன் என்­ப­தால்,

நாய­கி­யாக நடிப்­ப­வர் தெரிந்த முக­மாக இருக்க வேண்­டும் என விரும்­பி­னோம். சில இளம் நாய­கி­கள் நடிக்க ஆர்­வம் காட்­டிய போதும், ஆனந்தி பொருத்­த­மான தேர்­வாக

இருப்­பார் எனத் தோன்­றி­யது.

"அந்த சம­யத்­தில்­தான் ஆனந்­தி­யின் கால்­ஷீட் இரண்டு மாதங்­க­ளுக்கு இருக்­கும் தக­வல் கிடைத்­தது. நாங்­களும் அவரைத் தொடர்­பு­கொண்­டோம். இந்­தப் படத்­தில் அவர் நடிக்

­கி­றார் என்­றால் அதற்கு கதை­தான் கார­ணம். அவர் எவ்­வாறு நடிப்­பார் என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும்.

"இது­வரை அவர் நடித்த அனைத்து படங்­களும் தனி முத்­திரை பதித்­த­வர். பொது­வாக படப்­பி­டிப்­பின்­போது, வச­னங்­களில் யாரா­வது தவறு செய்­து­விட்­டால் பின்­ன­ணிக் குரல் பதி­வின்­போது சமா­ளிக்­க­லாம் என்று நினைப்­பார்­கள். ஆனால் ஆனந்தி அதற்கு நேர்­மா­றாக படப்­பி­டிப்­பின்­போதே காட்­சி­களை உள்­வாங்கி என்ன மாதி­ரி­யான உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தைப் புரிந்­து­கொண்டு நடிப்­பார். அது­தான் அவ­ரது தனித்­து­வம் என்­பேன்.

"இப்­ப­டிச் செய்­யுங்­கள், அப்­படி நடிக்­க­லாம் என்­றெல்­லாம் ஆனந்­தி­யி­டம் சொல்ல வேண்­டிய அவ­சி­யமே இல்லை. அவரே இயக்­கு­ந­ரின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வார்," என்று ஆனந்­திக்­காக பெரிய பாராட்­டுப் பத்­தி­ரத்தை வாசிக்­கி­றார் இயக்­கு­நர் தாம­ரைச்­செல்­வன்.