நயன்தாரா கடின உழைப்பாளி எனப் பாராட்டும் சமந்தா

நயன்தாரா கடின உழைப்பாளி எனப் பாராட்டும் சமந்தா

2 mins read
57e8627b-2aa0-4931-a1da-7e0a095340ac
-

நடிகைகள் நயன்தாரா, சமந்தா.

ரசி­கர்­களை மகிழ்­விக்­கும் ஒரு படத்­தில் தாமும் இருக்க வேண்­டும் என விரும்­பி­ய­தால்­தான் 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தாக நடிகை சமந்தா கூறி­யுள்­ளார்.

மேலும், நயன்­தா­ரா­வைப் போல் விசு­வா­ச­மான, கடு­மை­யாக உழைக்­கக்­கூ­டிய ஒரு நடி­கையை தாம் இது­வரை பார்த்­த­தில்லை என்­றும் தமது டுவிட்­டர் பதி­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தப் படத்­தில் நடிப்­பதா வேண்­டாமா என்­பது குறித்து ஆராய்ச்சி எதை­யும் மேற்­கொள்­ள­வில்லை. தினந்­தோ­றும் பல்­வேறு சிக்­கல்­கள், பிரச்­சி­னை­களில்

சிக்­கிக்­கொண்டு பர­ப­ரப்­பாக வாழ்ந்து வரு­கி­றோம். அதி­லி­ருந்து விடு­பட்டு பிரச்சினைகளை மறந்து சிரித்து படத்­தைப் பார்க்க விரும்­பும் ரசி­கர்­க­ளுக்­காக உரு­வான படம் இது. எனவே, நானும் இதில் இடம்­பெற விரும்­பி­னேன்.

"விஜய் சேது­ப­தி­யு­டன் நடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக நீண்ட நாள்­க­ளாக காத்­தி­ருந்­தேன். அந்த காத்­தி­ருப்பு வீண் போக­வில்லை.

"அனிருத்தைப் பொறுத்தவரை தமிழ்த் திரையுலகில் மற்றொரு இசை மேதை எனலாம். அவரது இசை தனிச்சிறப்பு வாய்ந்தது. அவர் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன.

"நயன்­தாரா எத்­த­கை­ய­தொரு கடின உழைப்­பாளி என்­பதை நேரில் பார்த்­தேன். அவ­ரது வெற்­றிக்கு இந்த உழைப்­பும் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­தின் மீதான விசு­வா­ச­மும்­தான் கார­ணம் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் சமந்தா.

இதற்­கி­டையே, 'காத்து

வாக்­குல ரெண்டு காதல்' படத்­தில் நயன்­தாரா, சமந்தா இரு­வ­ருமே சொந்­தக் குர­லில் பேசி நடித்­துள்­ள­னர்.

இருப்­பி­னும், சமந்­தா­வின் குரல் எடு­பட்ட அள­வுக்கு, நயன்­தா­ரா­வின் குரல் அவ­ரது கதா­பாத்­தி­ரத்­துக்கு பொறுத்தமாக அமை­ய­வில்லை என்று விமர்­ச­னம் எழுந்­துள்­ளது.

"இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் நடிக்க வேண்டும் என்பதில் முடிவாக இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, திரையில் அவர் அசத்தி உள்ளார்," என்கிறார் விக்னேஷ் சிவன்.