"ஒரு படத்துக்கான கதையைக்
கேட்கும்போது அதன் இயக்குநர் என்னைத் திருப்திப்படுத்த வேண்டும் என விரும்புவேன். அதே சமயம், படப்
பிடிப்பு என்றால் என் நடிப்பு இயக்குநருக்கு மனநிறைவு தர வேண்டும் என ஆசைப்படுவேன்," என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இன்று கிட்டத்தட்ட முழுநேர நடிகராகிவிட்டார். குறிப்பாக, வித்தியாசமான வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எஸ்.ஜே.சூர்யாவுக்குத்தான் இயக்குநர்களிடம் இருந்து முதல் அழைப்பு வருகிறது.
இவர் நாயகனாக நடித்துள்ள 'பொம்மை', பேராசிரியராக நடித்துள்ள 'டான்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
"நான் எப்போதுமே இயக்குநர்களின் விருப்பமான நடிகராக இருக்க விரும்புகிறேன். படப்பிடிப்பின்போது என் நடிப்பைப் பார்த்து இயக்குநருக்கு மனநிறைவு
ஏற்பட்டால் அது போதும். ரசிகர்களுக்கும் தன்னால் பிடித்துப்போகும். அதனால் படப்பிடிப்பில் இயக்குநர் சொல்வதை மட்டுமே கேட்பேன்," என்று தன் வெற்றி ரகசியத்தைப் பகிர்கிறார் சூர்யா.
வாழ்க்கை நல்லவிதமாக போய்க் கொண்டிருப்பதாக குறிப்பிடுபவர், அனைத்து நல்ல விஷயங்களுக்கும் கடவுள்தான் காரணம் என்று பக்திப்பரவசத்துடன் சொல்கிறார்.
"சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் நடித்த அனுபவம் அருமையாக இருந்தது. கதையைக் கேட்டபோதே மிகவும் பிடித்துப்போனது. 'மாநாடு' படம் அதிரடியான வெற்றி என்றால், 'டான்' அழகான வெற்றியாக இருக்கும். இந்தப் படத்தின் இயக்குநர் சிபி படப்பிடிப்பில் அழகாக நடித்துக்காட்டுவார். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் முதல் படம்
"அவர் இப்போது பெரிய இடத்தில் உள்ளார். இருப்பினும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது இருந்த எளிமையை இப்போதும் அவரிடம் காண முடிகிறது.
அடிக்கடி கவுண்டமணி சாரின்
வசனங்களைப் பேசுவார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக அவரது நடிப்பு நன்றாக இருந்தது. கல்லூரி கலாட்டாக்கள் எல்லாம் அவரது பாணியில் இருக்கும். அதைக் கடந்த உணர்வுப்பூர்வமான சில அம்சங்களிலும் அசத்தியுள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை விஜய் சாருக்குப் பிறகு அனைத்து குடும்பங்களிலும், நம்ம வீட்டுப் பிள்ளையாக சிவகார்த்திகேயனைத்தான் கருது
கிறார்கள். அதற்குத் தகுதியான குணங்கள் அவரிடம் உள்ளன," என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

