திரையுலகம் மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது. சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆறு புதுப்படங்கள் வெளியீடு கண்டுள்ளன.
கடந்த இரு வாரங்களாக புதுப்படங்களை வெளியிடுவது தாம
தமானது. மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, வெளியீடு காண இருந்த சில படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இப்போது கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு இல்லை என்பதால், தயாரிப்பாளர்களும் விநியோகிப்பாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். இதையடுத்து, வெளியீடு காண தயாராக உள்ள படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. முதற்கட்டமாக, இவ்வாரம் ஆறு படங்கள் வெளியாகின்றன.
'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'ஹாஸ்டல்' ஆகிய இரு படங்களுக்கும் போதுமான திரை
யரங்குகள் கிடைத்ததால் முதலில் வெளியீடு கண்டுள்ள நிலையில், 'கதிர்', 'அமைச்சர்', 'திவ்யா மீது காதல்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.
'பயணிகள் கவனிக்கவும்' படம் மட்டும் ஓடிடியில் வெளியாகியது.
இனி வரும் நாள்களில் வாரத்திற்கு இரண்டு, மூன்று படங்களாவது வெளியாகும் எனத் தெரிகிறது. எதிர்வரும் மே 6ஆம் தேதி 'கூகுள் குட்டப்பா', 'விசித்திரன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர அதிக பொருள் செலவில் தயாராகி உள்ள சில படங்களும் வெளியீடு காண உள்ளன.
இதற்கிடையே, பட வெளியீடு தொடர்பில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு, சிறிய படங்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
'ஹாஸ்டல்' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர்.

