ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ரெங்கம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார். நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், எம்ஜிஆர் நடித்த 'விவசாயி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கடைசிக் காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரெங்கம்மாள் பாட்டி வறுமையில் வாடியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோவையில் உள்ள தன் வீட்டில் அவர் காலமானார்.
'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'டான்', 'நெஞ்சுக்கு நீதி', 'விக்ரம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து இரண்டு வார இடைவெளியில் திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளன.
இவை அனைத்தையுமே உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் எதிர்வரும் ஜூன் மாதம் வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் உதயநிதியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சின்ன படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்றும் ஒரு தரப்பு புகார் எழுப்பியுள்ளது. ஆனால், நல்ல படங்களை ஆத ரிப்பது தவறா என்று உதயநிதி தரப்பும் கேள்வி எழுப்புகிறது.
'பீஸ்ட்' படத்தின் வசூல் மனநிறைவு தந்தாலும், அப்படம் தொடர்பான எதிர்மறை கருத்துகள், விமர்சனங்களால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். இதற்கு முன் இல்லாத அளவிற்கு விமர்
சகர்கள் ஏன் தன் மீது வெறுப்புணர்வும் வன்மமும் பாராட்டுகிறார்கள் என்று அறிந்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றிடம் இதுகுறித்த விவ ரங்களை சேகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளாராம்.
சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் குறித்து கலவையான விமர் சனங்கள் வெளிவந்துள்ளன.

