தாதாசாஹேப் பால்கே அனைத்துலக திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது 'ஜெய்பீம்' திரைப்படம்.
ஞானவேல் இயக்கியுள்ள இப்படம், 2022ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
விருது கிடைக்கவில்லை என்றாலும், உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தாதாசாஹேப் பால்கே அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்தபடம், சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது 'ஜெய் பீம்'.
சிறந்த துணை நடிகராக மணிகண்டன் தேர்வாகி உள்ளார். இத்தகவலை அப்படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு காட்சிகளுக்கு என சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி உள்ளதே இதற்குக் காரணமாம்.