தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான சொந்தக் கட்டடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்கப் பொதுக்குழு முடிந்ததும் கூட்டாக தெரிவித்தனர்.
இன்னும் 40 விழுக்காடு பணிகள் மீதமுள்ளதாகவும் வங்கியில் கடன் பெற்று பணிகளை முடிக்க இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
"நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும். அந்த நிதியை எப்படி திரட்டுவது என்று ஆலோசித்தோம். வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வாங்கி இருக்கிறோம்.
"உள் அலங்காரத்தோடு சேர்த்து இன்னும் 40 விழுக்காடு பணிகள் பாக்கி உள்ளது. நடிகர் சங்க கட்டடப் பணிக்காக நடிகர்களிடமும் நிதி கேட்போம்.
"கட்டடம் கட்டி முடித்த பிறகு அதில் வரும் வருவாயில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவிகள் வழங்குவோம்," என்று புதிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.