சிபி சத்யராஜ், நிகிலா விமல் இணைந்து நடித்துள்ள 'ரங்கா' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி இதை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ள இந்தத் தொகுப்பு ரசிகர்களைக் கவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"கதைப்படி, கதாநாயகனுக்கு மருத்துவ ரீதியில் சில பிரச்சினைகள் இருக்கும். குறிப்பாக, அவரது இரு கைகளில் ஒன்று திடீரென மூளையின் கட்டளைக்கு கட்டுப்படாது.
"அதன் காரணமாக ஏற்படும் விளைவுகள் என்ன, நாயகனின் மருத்துவ ரீதியிலான பிரச்சினைகளால் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
"படம் முழுவதும் அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்திருக்கும்," என்கிறார் படத்தின் இயக்குநர் வினோத்.

