'விக்ரம்' படப் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கமல்

'விக்ரம்' படப் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கமல்

1 mins read
9f919d8e-0929-45a1-a0af-806f68bfda9a
'விக்ரம்' படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் கமல். -

கமல்­ஹா­சன் நடித்­துள்ள 'விக்­ரம்' படத்­தின் ஒற்­றைப்­பா­டல் வெளி­யாகி உள்­ளது. அனி­ருத் இசை­ய­மைத்­துள்ள இப்­பா­டலை எழுதி பாடி­யுள்­ளார் கமல். பாடல் வரி­கள் மூலம் மத்­திய அரசை அவர் மறை­மு­க­மாக குத்­திக்­காட்டி உள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் விஜய்­சே­து­பதி, பகத் ஃபாசில் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­திங்­களில் நடித்­துள்­ள­னர். மேலும், நரேன், காளி­தாஸ் ஜெய­ராம், 'பிக்­பாஸ்' ஷிவானி, தொகுப்­பா­ளினி மகேஸ்­வரி, மைனா நந்­தினி எனப் பெரிய நட்­சத்­தி­ரப் பட்­டா­ளத்­தையே கள­மி­றக்கி உள்­ள­னர்.

பாட­லுக்­கான இசை தம்மை வெகு­வாக கவர்ந்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள கமல்­ஹா­சன், அனி­ருத்தை பெரி­தும் பாராட்டி உள்­ளார். 'பத்­தல பத்­தல' என்று தொடங்­கும் 'விக்­ரம்' படப்­பா­ட­லில், தாம் அணிந்­தி­ருக்­கும் சட்­டை­யைக் கழற்றி, கழுத்­தில் சுற்­றிக்­கொண்டு இளை­யர்­க­ளு­டன் குத்­தாட்­டம் போடு­கி­றார் கமல்.

'விக்­ரம்' படம் எதிர்­வ­ரும் ஜூன் 3ஆம் தேதி வெளி­யா­கிறது. முன்­ன­தாக, மே 15ஆம் தேதி முன்­னோட்­டக் காட்­சித்தொகுப்பை வெளி­யி­டு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, இந்­தப் படத்­தில் சூர்யா சிறப்பு தோற்­றத்­தில் நடித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை படக்­கு­ழு­வி­னர் இது­வரை உறுதி செய்­ய­வில்லை.

எனி­னும், படப்­பி­டிப்­புத்­த­ளத்­தில் கம­லும் சூர்­யா­வும் சந்­தித்­துப் பேசும் காணொளி ஒன்று சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்­ளது.

இத­னால் சூர்யா இப்­ப­டத்­தில் நடித்­தி­ருப்­பது உறுதி என்று ரசி­கர்­கள் கூறுகின்றனர்.