‘துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்துப் பேசும் படம்’

இப்­போ­து­தான் தமிழ் சினிமா அசல் பிரச்சி­னை­க­ளைப் பேசத் தொடங்கி உள்­ளது என்­றும் அந்த வகை­யில் தமது படம் பேசு­பொ­ரு­ளாகி உள்­ளது என்­றும் சொல்­கி­றார் இயக்கு­நர் தீபக்.

துப்­பு­ர­வுத் தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைப் பேசும் பட­மாக உரு­வாகி உள்ள 'விட்­னஸ்' படத்தை தீபக் இயக்கி உள்ளார். இதன் ஒளிப்­ப­தி­வா­ள­ரும் இவர்­தான்.

"மன­த்தைப் பாதிக்­காத எதை­யும் என்­னால் தொட முடி­யாது. கலை என்­பது மக்­க­ளுக்கு வேடிக்கை காட்­டு­வ­தல்ல. அதை மன­மார உணர்ந்­தி­ருக்­கி­றேன்.

"எந்­தப் படைப்பை முத­லா­வ­தாக எடுத்­துக்­கொள்­ள­லாம் என நினைத்­த­போது மனத்­திற்­குள் வந்­தது துப்­பு­ர­வுத் தொழி­லா­ளர்­கள்­தான். நாம் நாக­ரி­கத்­தின் மேலான பூச்சில் வாழ்­கி­றோம் என்­பதை இவர்­க­ளின் வாழ்க்­கையை அறிய முற்­பட்­ட­போது உணர்ந்­தேன்," என்­கி­றார் தீபக்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இப்­ப­டத்­தின் திரைக்­க­தையைச் செதுக்­கு­வ­தற்­காக அதி­கம் மெனக்­கெட்­ட­தா­கச் சொல்­ப­வர், மலக்­குழி­யில் இறங்­கு­வ­தால் மர­ணிக்­கும் மனி­தர்­க­ளைப் பற்றி விரி­வா­கப் பேசும் அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பி­டு­கி­றார்.

"தமி­ழ­கத்­தில் மலக்­கு­ழி­யில் இறக்­கும் மனி­தர்­க­ளின் மர­ணம் எவ­ரை­யும் எதை­யும் தொந்­த­ரவு செய்­யவே இல்­லையா என்ற நினைப்பே அவர்­க­ளின் மர­ணத்­தைக் காட்­டி­லும் துய­ரம் தரு­வ­தாக இருக்­கிறது. வாழ்­வ­தற்கு வேறு தொழில் கிடைக்­கா­ம­லேயே இந்த முடிவை நோக்கி அவர்­கள் சென்று­வி­டு­கி­றார்­கள்.

"எனவே 'விட்­னஸ்' மூலம் பேச வேண்­டிய அர­சி­ய­லைப் பேசி­இருக்கி­றோம். அச்­ச­மின்றி அதிகார அமைப்பை நோக்கி கேள்வி கேட்­டி­ருக்­கி­றோம். பிரச்­சி­னை­யின் ஆழம் வரை இந்­தப் படம் செல்­கிறது. மர­ணத்­தின் கத­வு­கள் திறந்து வாழ்க்­கையே தண்­டனை ஆகி­விடு­கிற அவர்­கள் நிலை­மையை நாம் எண்­ணிப் பார்க்­கத்­தான் வேண்­டும்," என்­கி­றார் தீபக்.

எளிய மக்­களை அதி­கா­ரம் என்ன செய்­யும் என்­ப­தை­யும் இப்­படத்­தில் பேசி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், மக­னின் இறப்­பிற்கு நீதி கேட்­டுப் போரா­டும் அம்­மா­வுக்கு நீதி கிடைத்­ததா, நீதி­யைத் தடுக்­க­வும் நிறுத்தி வைக்­க­வும் என்­னென்ன விஷ­யங்­கள் நடக்­கின்­றன என்­ப­தை­யும் அல­சி­உள்­ள­தா­கக் கூறு­கி­றார்.

"இது ஒரு முக்­கி­ய­மான அர­சி­யல். இதில் தன் மகனுக்­கா­கப் பேசத் தொடங்கும் அம்மா ரோகிணி கடை­சி­யில் சமு­தா­யத்­திற்­கா­கப் பேசத் தொடங்குகிறார்.

"அந்த மாற்றம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது அனை­வரும் பார்க்க வேண்­டிய படமாக இருக்கும்," என்­கிறார் தீபக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!