திரிஷா: பட்டம் வேண்டாம்

திரிஷா: பட்டம் வேண்டாம்

2 mins read
54b50b49-608d-4539-abc1-73ebd7c47c51
திரிஷா -

தமக்கு எந்­த­வி­த­மான பட்­டப்­பெ­யரோ, அடை­மொ­ழியோ தேவை இல்லை என்­கி­றார் திரிஷா.

தற்­போது 'தி ரோட்' என்ற படத்­தில் நடித்­துக்­கொண்­டி­ருப்­ப­வர், அதற்­கான படப்­பி­டிப்­புக்­காக மது­ரை­யில் முகா­மிட்­டுள்­ளார். இதற்கு முன்பு 'கில்லி' படத்­தில் நடித்­த­போ­து­தான் மது­ரை­யில் அதிக நாள்­கள் தங்கி இருந்­தா­ராம். அதன் பிறகு இப்­போ­து­தான் மது­ரை­யில் தொடர்ந்து தங்கி உள்­ளார்.

இந்­தப் படத்­தின் கதையை பல கதா­நா­ய­கி­க­ளி­டம் கூறி­யுள்­ளார் இயக்­கு­நர் அருண் வசீ­க­ரன். கதை நன்­றாக இருப்­ப­தா­கச் சொன்­னா­லும், நடிக்­கத் தயங்­கி­னார்­க­ளாம்.

"அதற்­குக் கார­ணம் உள்­ளது. இது கதா­நா­ய­கியை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படம்­தான். அதே­ச­ம­யம் 'சார்­பட்டா பரம்­பரை' படத்­தில் 'டான்­ஸிங் ரோஸ்' கதா­பாத்­தி­ரத்­தில் நடித்த சபீர் முக்­கிய வேடத்­தில் நடிக்­கி­றார். நாய­கி­யைப் போல் இன்­னொரு கதா­பாத்­தி­ரத்­துக்­கும் முக்­கி­யத்­து­வம் உள்­ள­தால் பல நாய­கி­கள் நடிக்க தயங்­கி­னர். அதன் பிறகு திரி­ஷாவை அணு­கி­னோம்.

"திரி­ஷா­வின் கால்­ஷீட் எளி­தில் கிடைத்­து­வி­டாது என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். முதல் முறை தொடர்­பு­கொண்­ட­போது, கால்­ஷீட் இல்லை என்று கூறி­விட்­டார். கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு மீண்­டும் படப்­பி­டிப்­பு­கள் நடக்­கத் தொடங்­கிய நேரம் அது. திரிஷா நடித்து அரை­கு­றை­யாக நின்­று­போன படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­கள் வரி­சை­யாக நடை­பெற்று வந்­தன. அத­னால்­தான் அவர் எங்­கள் படத்­தில் நடிக்க மறுத்­தார் என்­ப­தைப் புரிந்து கொண்­டேன்.

"எனவே மீண்­டும் சந்­தித்து முழுக் கதை­யை­யும் காட்­சி­க­ளை­யும் விவ­ரிக்­கும் அச்­சி­டப்­பட்ட பிர­தியை அளித்­தேன். படித்த பிறகு அவரே தொடர்­பு­கொண்டு ஒவ்­வொரு காட்­சி­யை­யும் குறிப்­பிட்டு, அரு­மை­யாக இருப்­ப­தா­கப் பாராட்­டி­னார். அதன் பிறகு அவர் காட்­டிய ஆர்­வ­மும் அர்ப்­ப­ணிப்­பும் என்னை வியக்க வைத்­தன," என்­கி­றார் அருண் வசீ­க­ரன்.

சென்­னை­யில் தொடங்கி மது­ரை­யில் முடி­கிறது இப்­ப­டத்­தின் கதை. சென்­னைப் பெண்­ணான திரிஷா திடீ­ரென மது­ரைக்­குப் போகி­றார். அங்கு அவ­ருக்கு என்ன நேர்ந்­தது, எதற்­காக பழி­வாங்­கும் பட­லத்­தில் ஈடு­ப­டு­கி­றார் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்­கான விடை­க­ளின் தொகுப்­பு­தான் இந்­தப் பட­மாம்.

ஒவ்­வொரு மனி­த­ருக்­கும் ஏதே­னும் ஒரு வலி­யும் அதற்­கான கார­ண­மும் இருக்­கும். அப்­படி தனது வலிக்­கான கார­ணத்தை தேடிச் செல்­கி­றார் திரிஷா.

அவ­ரது எளி­மை­யும் அவ­ரது நட்­பான அணு­கு­மு­றை­யும் தம்மை வியப்­ப­டைய வைத்­த­தா­கக் கூறு­கி­றார் இயக்­கு­நர்.

"அது மட்­டு­மல்ல, அவ­ரி­டம் எந்­த­வி­த­மான எதிர்­பார்ப்­பு­களும் இல்லை. புக­ழுக்­கும் ஆசைப்­ப­டு­வ­தில்லை. ஒரு­நாள் இந்­தப் படத்­தின் தலைப்­பில் அவ­ருக்கு ஒரு பட்­டம் கொடுக்க விரும்­பு­வ­தா­கக் கூறி­னேன். 'தென்­னிந்­திய அரசி' உள்­ளிட்ட சில பட்­டப் பெயர்­க­ளைக் குறிப்­பிட்­ட­போது, எது­வும் வேண்­டாம் என்று உறு­தி­யா­கக் கூறி­விட்­டார்.

"ரசி­கர்­களும் மக்­க­ளும்­தான் பட்­டம் கொடுக்க வேண்­டும். அந்த வேலையை அவர்­கள் பார்த்­துக் கொள்­வார்­கள். படைப்­பா­ளி­கள் அதைச் செய்­யக்­கூ­டாது. இத­னால் படத்­தின் தரம் பாதிக்­கப்­படும் என்­றார் திரிஷா. அதைக்­கேட்டு வியந்­தேன், என்கிறார் அருண் வசீகரன்.