மீண்டும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார் ஜீவா.
இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படம் 'களத்தில் சந்திப்போம்'. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்தக் கூட்டணி தற்போது புதிய படம் மூலம் இணைந்துள்ளது.
படப்பிடிப்புக்கான பணிகள் சத்தமின்றி நடைபெற்று வருவதாகவும் அடுத்த மூன்று மாதங்களில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் ஜீவா தரப்பில் கூறப்படுகிறது.
கதாநாயகி, பிற முக்கிய பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
"வணிக அம்சங்கள் நிறைந்து உள்ள படமாக இருந்தாலும், மக்களுக்கு நல்ல தகவலைச் சொல்லும் படைப்பாகவும் இது உருவாகும். இது அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற படமாக இருக்கும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜீவா.

