பரிதாப நிலையில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா

பரிதாப நிலையில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா

1 mins read
471c1a68-0e83-4af0-8589-ebc98f99fb53
நடிகை சரிகா (இடது). மகள்கள் அக்‌ஷரா, ஷ்ருதியுடன் கமல்ஹாசன். -
multi-img1 of 2

கொரோனா நெருக்­கடி வேளை­யில் கையில் பணம் இன்றி மிக­வும் சிரமப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார் கமல்­ஹா­ச­னின் முன்­னாள் மனைவி­யும் நடி­கை­யு­மான சரிகா.

கையில் இருந்த பணம் முழு­வதும் கரைந்­து­போ­ன­தால் மேடை நாட­கங்­களில் நடித்து சம்­பா­தித்து நிலை­மையைச் சமா­ளித்­த­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

"மேடை நாட­கங்­களில் நடித்­த­போது நாளொன்­றுக்கு 2 ஆயி­ரம் ரூபாய்­தான் சம்­ப­ள­மா­கக் கிடைத்­தது. எனவே மீண்­டும் சினி­மா­வில் நடிக்க முடிவு செய்­துள்­ளேன்.

"அறு­பது வய­தைக் கடந்­து­விட்ட நடி­கை­க­ளுக்கு எப்­போ­தா­வ­து­தான் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­கள் அமை­கின்­றன. அவர்­கள் மீது 'அம்மா கதா­பாத்­தி­ரங்­கள்' திணிக்­கப்­ப­டு­கின்­றன. இது நீண்ட கால­மாக நடந்து வரு­கிறது. நான் திரைப்­படங்­களில் நடிப்­ப­தில் இருந்து விலகி இருக்க இது­வும் ஒரு முக்கிய கார­ணம். மீண்­டும் நடிக்க வந்­த­போது, என்னை விட மூன்று வயது குறை­வான நாய­கர்­க­ளுக்கு அம்­மா­வாக நடிக்க வேண்­டும் என்று கூறி­னார்­கள். நான் மறுத்து­விட்­டேன்," என்­கி­றார் சரிகா.

தனது மகள்­கள் ஷ்ரு­தி­யும் அக்­‌ஷ­ரா­வும் திரை­யு­ல­கில் லட்­சக்­கணக்­கில் சம்­பா­தித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், சரிகா ஏன் இரண்­டா­யி­ரம் ரூபாய்க்­காக நடிக்க வேண்­டும் என சமூக ஊட­கங்­களில் பல­ரும் கேள்வி எழுப்பி உள்­ள­னர். அவரது நிலை பரிதாபகரமானது என்றும் சிலர் கூறியுள்ளனர்.