நாசரைக் கண்டதும் பயந்து நடுங்கிய நட்ராஜ்

நாசரைக் கண்டதும் பயந்து நடுங்கிய நட்ராஜ்

1 mins read
2191fb3b-7de0-4b37-a3bd-5bd251337169
'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற காட்சியில் நட்ராஜ். -

'வெப்', 'இன்­ஃபி­னிட்டி', 'குரு­மூர்த்தி', 'பகா­சூ­ரன்' என தமி­ழில் பல படங்­களில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார் நட்டி எனும் நட்­ராஜ்.

இந்­தி­யில் முன்­னணி ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி­யாற்றி வந்த இவரை, கோடம்­பாக்­கத்து நண்­பர்­கள் முழு நேர நடி­க­ராக மாற்­றி­விட்­ட­னர்.

"நண்­பர்­கள் இணைந்து தயா­ரித்த 'நாளை' என்ற படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வேண்­டி­ய­வர், திடீ­ரென அமெ­ரிக்கா சென்­று­விட்­டார். அத­னால் என்னை நடிக்க வைத்­த­னர். அந்த கதா­பாத்­தி­ரத்­துக்கு வேறொரு பெயர்­தான் இருந்­தது. ஆனால், நண்­பர்­கள் என்னை நட்டி என்று கூப்­பி­டு­வ­தால் அதையே கதா­பாத்­தி­ரத்­துக்­கும் சூட்­டி­விட்­ட­னர். இன்­ற­ளவு அந்­தப் பெயர் நிலைத்­து­விட்­டது. கேமரா முன்பு நடி­க­ராக நின்ற முதல் நாள் இன்­றும் மன­தில் பசு­மை­யா­கப் பதிந்­துள்­ளது.

"அது மட்­டு­மல்ல, முதல் நாளன்றே நாச­ரு­டன் நடிக்க வேண்­டும் என்­ற­னர். அதைக்­கேட்­ட­தும் உத­றல் எடுத்­து­விட்­டது. அதைப் புரிந்­து­கொண்டு நாசர்­தான் என்னை ஆசு­வா­சப்­ப­டுத்­தி­னார். அதன்­பி­றகு நடிப்­பும் பழ­கி­விட்­டது," என்­கி­றார் நட்டி.

இவர் திரை­யு­ல­கில் பணி­யாற்­றத் தொடங்கி 23 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. ­நா­ய­க­னா­கத்­தான் நடிப்­பேன் என இவர் அடம்­பி­டிப்­ப தில்லை. அனு­ப­வம் கைகொ­டுப்­ப­தால் நல்ல கதை­களைத் தேர்ந்­தெ­டுக்க முடி­கிறது என்­கி­றார்.

"ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த பட வேலை­களில் ஈடு­படு­வேன். இதன் கார­ண­மாக என்­னால் எந்­த­வி­த­மான குழப்­பங்­களோ, பிரச்­சி­னை­களோ படக்­கு­ழு­வுக்கு ஏற்­ப­டு­வ­தில்லை. நடிப்பு, ஒளிப்­பதிவு ஆகிய இரண்­டுக்­கும் இந்­தக் கொள்­கை­யைத்­தான் கடைப்­பி­டிக்­கி­றேன்," என்கிறார் நட்ராஜ்.