நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஹரா' என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் மோகன்.
ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்ட மோகன், பிறகு அவரது சில படங்கள் தோல்வி கண்டதால் திரையுலகை விட்டு ஒதுங்கி நின்றார்.
இப்போது அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த 'ஹரா' படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப கடுமையாக உழைத்து வருகிறார்.
"பள்ளியில் படிக்கும்போதே குழந்தைகளுக்கு முதலுதவி, பாலியல் தொல்லைகள் குறித்து சொல்லித்தர வேண்டும்.
"மேலும் இந்திய சட்டங்கள் குறித்தும் கற்றுத்தருவது அவசியம். இந்தக் கருத்தை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறோம்.
"இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் கண்டு ரசித்து ஆதரவு அளித்த ரசிகர்கள் 'ஹரா' படத்தையும் வரவேற்பார்கள் என நம்புகிறோம்.," என்கிறார் இயக்குநர் விஜயஸ்ரீ.

