அஜித்தின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். நீண்ட இடை வெளிக்குப் பிறகு அஜித் இதில் வில்லனாக நடிக்க, அவரது ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்த ஜான் கொக்கனை அஜித்துடன் திரையில் மோதுவது உறுதியான நிலையில், இப்போது சமுத்திரக்கனியும் இக்குழுவில் இணைந்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
சர்க்கரை அதிகம் உள்ள பொருள்களை சாப்பிடத் தூண்டும் விளம்பரத்தில் நடித்ததாக நடிகை ஆலியாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சர்க்கரை அதிகமுள்ள பானத்தைத் தாம் பருகுவதில்லை என்றும் அதிக சர்க்கரை உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார் ஆலியா பட்.
தற்போது அதற்கு நேர்மாறாக
சர்க்கரை அதிகமுள்ள பானங்களையும் உணவுப் பொருள்களையும் ஆதரிக்கும் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதைச் சுட்டிக்காட்டி ஆலியாவை சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.
காஷ்மீரில் நடுங்க வைக்கும் குளிருக்கு மத்தியிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார் சமந்தா. தெலுங்கு நாயகன்
விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக் காக காஷ்மீர் சென்றுள்ளார் சமந்தா. மறக்காமல் தம் பயிற்றுநரையும் அழைத்துச் சென்றுள்ள இவர், அங்கு தினமும் உடற்பயிற்சி செய்கிறார். "உடற்பயிற்சிக்காக தினமும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் கவனமாகவும் உறுதியாகவும் உள்ளேன்," என்று குறிப்பிடும் சமந்தா, காஷ்மீர் உடற்பயிற்சி காணொளி ஒன்றையும் தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் தலைவர் டோனியின் தயாரிப்பில் உரு வாகும் படத்தில் தாம் நாயகி யாக நடிக்க உள்ளதாக வெளி யான தகவலை மறுத்துள்ளார் நயன்தாரா. இதுபோன்ற மோசடித் தகவல்கள் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியிடம் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் டோனியின் நிறுவனத்துக்குப் பொறுப்பேற்க உள்ளதாக வெளிவந்த தகவலை டோனி தரப்பும் மறுத்துள்ளது.

