நான்கு கதாநாயகிகள் நடித்துள்ள 'கன்னித்தீவு' படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் மூன்று நாயகிகள் பங்கேற்காததை அடுத்து, மூத்த திரையுலகப் பிரமுகர்கள் அவர்களைக் கண்டித்துள்ளனர்.
வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா ஜவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியுள்ள படம் 'கன்னித்தீவு'.
இதன் வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், நடிகர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால், சுபிக்ஷாவைத் தவிர மற்ற மூன்று நாயகிகளையும் காணவில்லை. இத்தனைக்கும் மூன்று பேருக்கும் கைவசம் பெரிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுபிக்ஷா, "ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம்.
"இந்தப் படத்தை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குநர் சுந்தர் பாலு உருவாக்கி உள்ளார்," என்றார்.

