இப்போதெல்லாம் படத் தலைப்பை வைத்தே ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதில் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கவனமாக உள்ளனர். அந்த வகையில், ஒரு புதுப் படத்துக்கு 'ஓட விட்டு சுடலாமா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஜிஜேஷ் இயக்குகிறார்.
கதைப்படி நாயகன் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவன் காதலிக்கும் பெண்ணை பெரிய ரவுடிக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் சீரழித்துவிடுகிறான்.
எந்தவித வலுவான பின்புலமும் இல்லாத நாயகனிடம், அரிய சக்திகளைக் கொண்ட ஒரு கார் வந்து சேர்கிறது. அதை வைத்துக்கொண்டு அந்த ரவுடிக் கும்பலை பழிவாங்குகிறான்.
"இதுதான் கதை. தமிழ் சினிமாவுக்குப் பழிவாங்கும் கதைகள் புதிதல்ல. எனினும் அதை முற்றிலும் புதிய கோணத்தில் சொல்கிறோம்," என்கிறார் இயக்குநர் ஜிஜேஷ்.
'ஓட விட்டு சுடலாமா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

