முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பாவனா.
'பிங்க் நோட்' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் ருத்ரேஷ். 'தடம்' படத்தில் அருண் விஜய் நடித்தது போன்று, ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும் சகோதரி களாக நடிக்கிறார் பாவனா.
இனி இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என முடிவு செய்துள்ள பாவனா, வணிக அம்சங்கள் மட்டுமே உள்ள படங்களைத் தவிர்த்து விடுகிறாராம்.
இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் புரிந்துள்ளார். மண மகள் எமிலி பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகளாவார். மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே திரு மணத்தில் கலந்துகொள்ள இமான் அழைப்பு விடுத்திருந்தார். திருமணப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். பாடகர் கிரிஷ், தன் மனைவியும் நடிகையுமான சங்கீதாவுடன் நேரில் சென்று புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார். 'கேப்டன்', 'மழை', 'காரி', 'பொய்க்கால் குதிரை', 'மை டியர் பூதம்', 'பப்ளிக்' உள்ளிட்ட படங்களுக்கு தற்போது இசையமைக்கிறார் இமான்.
அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள "பத்தலே, பத்தலே" எனத் தொடங்கும் பாடலை, இரண்டே நாள்களில் இருபது மில்லியன் பேர் இணையத்தில் கண்டு ரசித்துள்ளனர்.

