தாய்லாந்தில் தாக்கப்பட்ட பரத், படக்குழுவினர்

தாய்லாந்தில் தாக்கப்பட்ட பரத், படக்குழுவினர்

1 mins read

உண்­மைச் சம்­ப­வத்தை மைய­மாக வைத்து உரு­வாகி வரும் 'ஆக்­‌ஷன்' என்ற மலை­யா­ளப் படத்­தில் நடித்து வரு­கி­றார் பரத். இதன் படப்­பி­டிப்பு தாய்­லாந்­தில் நடை­பெற்று வந்­தது.

உரிய அனு­மதி பெற்­றி­ருந்­தாலும், படப்­பி­டிப்பு நடை­பெற்ற பகு­தி­யைச் சேர்ந்த மக்­கள், கணி­ச­மான தொகை தந்­தால்­தான் படப்­பி­டிப்பை நடத்த விடு­வோம் என்று தக­ராறு செய்­துள்­ள­னர்.

வேறு வழி­யின்றி படத் தயா­ரிப்­புத் தரப்பு பணத்­தைக் கொடுத்­திருக்­கிறது. ஆனால் இதை அறிந்த மற்­றொரு தரப்­பி­னர், தங்­க­ளுக்­கும் பணம் தர வேண்­டும் என்று கேட்க, தயா­ரிப்­பா­ளர் மறுத்­துள்­ளார்.

இத­னால் ஆவே­ச­ம­டைந்த அத்­தரப்­பி­னர் படப்­பி­டிப்பு வாக­னங்­களை சேதப்­ப­டுத்­தி­ உள்­ள­னர். படப்­பி­டிப்பு குழு­வி­னர் மீது கற்களை வீசி தாக்­கு­த­லும் நடத்தி உள்­ளனர். இனி­மே­லும் அங்கு படப்­பி­டிப்பு நடத்த முடி­யாது என்­ப­தால் படக் குழுவினர் இந்தியா திரும்ப முடிவு செய்­தி­ருக்­கி­றார்­களாம்.

கடந்த 2018ஆம் ஆண்டு தாய்­லாந்­தில் பெய்த கன மழை­யால் ஏற்­பட்ட திடீர் வெள்­ளப்­பெ­ருக்­கால் அங்­குள்ள சுற்­று­லாத்­த­ல­மான தாம் லுங் என்ற குகைக்­குள் சிறு­வர் கால்­பந்து அணி­யைச் சேர்ந்த 12 பேரும் அவர்­க­ளின் பயிற்­சி­யா­ள­ரும் சிக்­கிக்கொண்­ட­னர்.

ஒன்­பது நாள்­க­ளுக்­குப் பிறகு அவர்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு கடும் போராட்­டத்­துக்கு இடை­யில் மீட்­கப்­பட்­டனர். அந்­தச் சம்­ப­வத்தை மைய­மாக வைத்து ஆக்­‌ஷன் படம் உரு­வாகி வரு­கிறது.