கவர்ச்சிக்குப் புது விளக்கம்

கவர்ச்சிக்குப் புது விளக்கம்

3 mins read
5542d8ce-f5d9-4313-9998-78854def50ac
-

'சாணிக் காயி­தம்' படத்­துக்கு விமர்­சன, வசூல் ரீதி­யில் கிடைத்­துள்ள வர­வேற்பு கீர்த்­திக்கு இரட்டிப்பு மகிழ்ச்­சியை அளித்­துள்­ளது.

இது போதாது என்று, தெலுங்­கில் பர­சு­ராம் இயக்­கத்­தில் மகேஷ்­பா­பு­வுக்கு ஜோடி­யாக இவர் நடித்­துள்ள 'சர்­காரு வாரி பாட்டா' படம், வெளி­யீடு கண்ட முதல் நாளன்றே ஐம்­பது கோடி ரூபாய் வசூல் கண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இப்­ப­டம் வெளி­யீடு கண்ட திரை­ய­ரங்கு ஒன்­றில் மகேஷ் பாபு ரசி­கர்­கள் கீர்த்தி சுரே­ஷுக்கு 35 அடி உயர பதாகை வைத்­துள்­ள­னர்.

"தெலுங்கு ரசி­கர்­கள் தங்­கள் அபி­மான கதா­நா­ய­கர்­க­ளுக்கு மட்­டுமே இப்­படி பதாகை வைப்­பது வழக்­கம். ஆனால் கீர்த்­திக்கு இப்­ப­டி­யொரு வர­வேற்பு கிடைத்­தி­ருக்­கிறது எனில், அது உண்மை­யி­லேயே பெரிய விஷ­யம்.

"ரசி­கர்­கள் அவர் மீது மிகுந்த அன்பு கொண்­டி­ருப்­ப­தால் அதை பதாகை மூலம் வெளிப்­ப­டுத்தி உள்­ள­னர். அதி­லும் மகேஷ்­பாபுவு­டன் இணைந்து நடித்­துள்ள படத்­துக்­காக பதாகை வைத்­தி­ருப்­பது ஒட்­டு­மொத்த தெலுங்கு திரை­யு­ல­கத்­தி­னரை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது," என்­கி­றார்­கள் தெலுங்கு திரை­யு­ல­கப் பிர­மு­கர்­கள்.

இதற்­கி­டையே, கவர்ச்­சி­யாக நடிப்­பது குறித்து கீர்த்தி தெரி­வித்த கருத்­துக்கு சில தரப்­பி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மைய பேட்டி ஒன்­றில் தன் தாயும் நடிகை­யு­மான மேனகா கவர்ச்சி காட்­டா­மல் நடித்து நல்ல நடிகை எனப் பெய­ரெ­டுத்­துள்­ள­தா­க­வும் இதை நினைத்து தாம் பெரு­மைப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­யி­ருந்­தார் கீர்த்தி.

இதை வைத்து சமூக ஊட­கங்­களில் சிலர் கடு­மை­யாக கருத்து தெரி­வித்­த­னர். இத­னால் தாம் வருத்­தம் அடைந்­த­தா­க­வும் தமது கருத்தை சிலர் திரித்து வெளி­யிட்­டுள்­ள­தா­க­வும் கீர்த்தி குறிப்­பிட்­டுள்­ளார்.

"முத­லில் கவர்ச்சி என்­றால் என்ன என்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். எனக்­குத் தெரிந்த கவர்ச்சி என்­றால் அழகு. இதைப் புரிந்துகொள்­ளா­த­வர்­கள் அந்த வார்த்­தைக்கு வேறு அர்த்­தத்­தைக் கூறு­கின்­ற­னர்.

"அதே­ச­ம­யம், உடல் அழகை அதி­கம் வெளிப்­படுத்­தக்­கூ­டிய கதா­பாத்­தி­ரங்­களை நான் ஏற்­ப­தில்லை. இது எனது தனிப்­பட்ட முடிவு, அவ்­வ­ளவு­தான்," என்­கி­றார் கீர்த்தி.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் தீவிர உடற்­பயிற்சி மேற்­கொண்டு உடல் எடை­யைக் குறைத்­தி­ருப்­பது குறித்­துப் பல­ரும் கேள்வி எழுப்­பு­கிறார்­க­ளாம். பழைய தோற்­றம்­தான் நன்­றாக உள்­ளது என்­றும் கூறு­கி­றார்­க­ளாம்.

ஆனால் உடல் இளைத்து ஒல்­லி­யாக இருப்­பது­தான் பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­களை ஏற்று நடிக்க வச­தி­யாக உள்­ளது என்­கி­றார்.

"இப்­போது என்­னால் பல­ வ­கை­யான ஆடை­களை அணிய முடி­கிறது. அதற்கு இந்த ஒல்லி­யான உடல்­வா­கு­தான் கார­ணம். இதற்கு முன்பு இது சாத்­தி­ய­மில்லை. நான் சற்று குண்­டாக இருப்­ப­து­தான் தங்­க­ளுக்­குப் பிடித்­தி­ருக்­கிறது என்று சிலர் கூறு­கின்­ற­னர். பல ஆண்­டு­கள் என்னை அதே தோற்­றத்­தில் பார்த்­த­தால் அவர்­க­ளுக்கு அது பழகி­விட்­டது. ஆனால், திரை­யு­ல­கில் நீடிக்­க­வும் நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமை­ய­வும் இந்த ஒல்­லி­யான உடல்­வாகு அவ­சி­யம் எனக் கரு­து­கி­றேன்.

"ஒரே சம­யத்­தில் பல படங்களில் நடிப்­பது எனது மனதை உற்­சா­க­மாக வைத்­தி­ருக்க உத­வு­கிறது. ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் மட்­டுமே கவ­னம் செலுத்தி நடிக்­கும்­போது சில சம­யங்­களில் அலுப்பு தட்­டி­வி­டும். அடுத்­த­டுத்து வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கும்­போது ஜாலி­யா­க­வும் உற்­சா­க­மா­க­வும் இருக்­கிறது," என்­கி­றார் கீர்த்தி.

தனக்கு பதாகை வைக்­கப்­பட்­டது குறித்து ஊட­கங்­கள் மூல­மா­கத்­தான் முத­லில் தெரி­ய­வந்­தது என்று குறிப்­பி­டு­ப­வர், இந்­தத் தக­வல் தமக்கு இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது என்­கி­றார்.

"உண்­மை­யில் நான் இதை எதிர்­பார்க்­கவே இல்லை. ஒரு­சில நடி­கை­க­ளுக்­குத்­தான் தெலுங்கு ரசி­கர்­கள் இவ்­வாறு பதாகை வைத்து பெரு­மைப்­படுத்தி உள்­ளனர். அந்­தப் பட்­டி­ய­லில் நானும் இடம்­பெற்­றுள்­ளேன் என்­ப­தில் மகிழ்ச்சி," என்­கி­றார் கீர்த்தி.