திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
18d024ac-746b-4930-ac29-bbe5640e93be
-
multi-img1 of 2

 பிரசாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அந்தகன்' படம் ஜூலை மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் படம் திரைகாண்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

 அடுத்த ஆறு மாதங்க ளுக்கு படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுப்பது என முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா. மேலும், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெறவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தனது தோற்றப்பொலிவை மேம்படுத்த அவர் முடிவு செய்துள்ளாராம்.

 அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விக்ரம். இதற்கு 'மைதானம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தக் கதையை விஜய்க்காக உருவாக்கி இருந்தாராம் ரஞ்சித். என்ன காரணத்தினாலோ, விஜய் இதில் நடிக்கவில்லை. இதையடுத்து, விக்ரமிடம் இந்தக் கதையைச் சொல்லி இருக்கிறார் ரஞ்சித். அவருக்குப் பிடித்துப்போகவே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் முடிவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல்.

 நாயகியை மையப்படுத்தும் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். இந்நிலையில், நட்புக்காக ஒரு படத்தில் கௌரவ வேடத் தில் நடிக்க ஒப்புக்கொண்டுள் ளார். பெண் இயக்குநர் ஹலிதா சமீம் தற்போது 'மின்மினி' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கு கிறார். அதில் அமலாவுடன் விஷ்ணு விஷாலும் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

 சிவகார்த்திகேயன்

நடிப்பில் வெளியாகி உள்ள 'டான்' திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது. படம் வெளியீடு கண்ட மூன்று நாள்களில் மட்டும் முப்பது கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய இரு படங்களும்

நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதை அடுத்து, மூன்றாவதாக 'டான்' படமும் அந்தப் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களிலும் இதுகுறித்து பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.