'தசாவதாரம்-2'க்கு வாய்ப்பே இல்லை

'தசாவதாரம்-2'க்கு வாய்ப்பே இல்லை

2 mins read
aed7ca54-b2ce-4e35-8e9a-2f8278feb160
'கூகுள் குட்டப்பா' படத்தில் லாஸ்லியா, தர்ஷன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு. -

கமல்­ஹா­சன் நடிப்­பில் பெரும் வெற்றி­யைப் பெற்ற படம் 'தசா­வ­தா­ரம்'. இதன் இரண்­டாம் பாகம் தயா­ரிக்­கப்­பட இருப்­ப­தாக வெளி­யான தக­வலை இயக்­கு­நர் கே.எஸ்.ரவிக்­கு­மார் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார்.

எத்­தனை கோடி­க­ளைக் கொட்­டிக் கொடுத்­தா­லும் 'தசா­வ­தா­ரம்' போன்ற இன்­னொரு படைப்பை உரு­வாக்­கவே முடி­யாது என சென்னை அருகே உள்ள தனி­யார் கல்­லூரி நிகழ்ச்­சி­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"கமல் எப்­போ­தும் கடின உழைப்பை நம்­பக்­கூ­டி­ய­வர். 'தசா­வ­தா­ரம்' படத்­துக்­கும் அப்­ப­டித்­தான் உழைத்­தார்.

"சில தினங்­க­ளுக்கு முன் திடீ­ரென என்னைத் தொலை­பே­சி­யில் தொடர்புகொண்­டார். 'தசா­வ­தா­ரம்' வெளி­யாகி 12 ஆண்­டு­கள் ஆகி­விட்­டதா? என்று ஆச்­ச­ரி­யத்­து­டன் கேட்­ட­வர், அடுத்த இரண்டு மணி நேரம் பல்­வேறு விஷ­யங்­கள் குறித்துப் பேசி­னார்.

"கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே என்­னை­யும் கம­லை­யும் பார்ப்­ப­வர்­கள் 'தசா­வ­தா­ரம்' இரண்­டாம் பாகம் குறித்து கேட்­கி­றார்­கள். ஆனால் நானும் கம­லும் நினைத்­தால்­கூட அது­போன்ற இன்­னொரு படத்தை உரு­வாக்­கவே முடி­யாது. எனவே 'தசா­வ­தா­ரம்-2' உரு­வாக வாய்ப்பே இல்லை," என்­றார் கே.எஸ்.ரவிக்­கு­மார்.

ஓடிடி தளங்­க­ளால் சினி­மா­வுக்­குப் பாதிப்பா இல்­லையா என்­பது குறித்­தெல்­லாம் விவா­திக்க வேண்­டி­ய­தில்லை என்று குறிப்­பிட்ட அவர், ஓடிடி தளங்­க­ளால் திரை­யு­ல­கம் பாதிக்­கப்­ப­டாது என்­றார்.

"முன்பு தொலைக்­காட்சி வந்­த­போ­தும் இப்­ப­டித்­தான் சினி­மாவே அழிந்­து­வி­டும் என்று சொல்­லிக் கொண்­டி­ருந்­தார்­கள்.

"சினி­மாவை திரை­ய­ரங்­கில் பார்க்­கும் அனு­ப­வத்­துக்கு எது­வும் ஈடா­காது. அதே ­ச­ம­யம் ஓடிடி என்­பது இன்­னொரு விஞ்­ஞான வளர்ச்சி என்­பதை நாம் ஏற்­றுக்கொள்­ளத்­தான் வேண்­டும்," என்­றார் கே.எஸ்.ரவி­க்குமார்.

அவரது நடிப்­பில் உரு­வான 'கூகுள் குட்­டப்பா' படம் அண்மை­யில் வெளி­யா­னது. இதில் 'பிக்­பாஸ்' புகழ் தர்­ஷன், லாஸ்­லியா இரு­வ­ரும் நாய­கன், நாய­கி­யாக நடித்­துள்­ள­னர்.