'கொரோனாவால் மாறவில்லை'

'கொரோனாவால் மாறவில்லை'

3 mins read

எப்­போ­துமே நல்ல விமர்­ச­னங்­க­ளைப் பெற வேண்­டும் எனும் நோக்­கத்­து­டன் மட்­டும் படங்­களில் நடிக்க முடி­யாது என்­றும் நல்ல வரு­மா­னத்­துக்­கா­க­வும் நடிக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் சொல்­கி­றார் நடி­கர் சிபி­ராஜ்.

சினிமா ரசி­கர்­கள் இப்­போது வெகு­வாக மாறி­விட்­ட­தா­கச் சொல்­ப­வர், இப்­போ­தெல்­லாம் சோதனை முயற்­சி­களில் ஈடு­படு­வது குறித்து திரை­யு­ல­கத்­தி­னர் யோசிக்­கவோ, தயங்­கவோ தேவை இல்லை என்­கி­றார்.

கொரோனா ஏற்­ப­டுத்தி உள்ள தாக்­கத்­துக்­குப் பின்­னர் கதை­களை, கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் பல மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக சில நடி­கர்­கள் கூறு­கின்­ற­னர். படப்­பி­டிப்­பு­களை நடத்­தும் விதம், வியா­பார அணு­கு­முறை எல்­லாம் மாறி­விட்­டது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், சிபி­ராஜ் கொரோனா நெருக்­கடி தம்மை எந்த வகை­யி­லும் பாதிக்­க­வில்லை என்­கி­றார். தம்­மி­டம் எந்த மாற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் கூறு­கி­றார்.

"என்­னைப் பொறுத்­த­வரை 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சோதனை முயற்­சி­களில் ஈடு­பட்­டேன். அதற்கு நான் நடித்த 'லீ' திரைப்­ப­டமே நல்ல ஆதா­ரம். எப்­போ­துமே ஒரு­வித தனித்­து­வத்­து­டன் கூடிய பல்­வேறு முயற்­சி­களை நான் வர­வேற்­றுள்­ளேன்.

"அப்­போ­தெல்­லாம் ரசி­கர்­கள் வித்­தி­யா­ச­மான முயற்­சி­க­ளைத் தயக்­க­மின்றி ஏற்­றுக்­கொள்­கி­றார்­கள். எனவே, புது முயற்­சி­க­ளுக்­காக அவர்­க­ளைத் தயார்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

"அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு மொழி­களில் வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­க­ளு­டன் உரு­வா­கும் படங்­களை ரசி­கர்­கள் பார்க்­கக்­கூ­டிய வாய்ப்­பு­கள் அமைந்­துள்­ளன," என்­கி­றார் சிபி­ராஜ்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இவர் நடித்த 'ரங்கா' அண்­மை­யில் வெளி­யீடு கண்­டது. படம் முன்பே தயா­ரா­கி­விட்­டா­லும், கொரோனா விவ­கா­ரத்­தால் வெளி­யிட முடி­யா­மல் போன­தாம்.

ஓடிடி தளங்­களில் வெளி­யி­ட­லாம் என பல­ரும் ஆலோ­ச­னைக் கூறி­யுள்­ள­னர். ஆனால், சிபி­யும் தயா­ரிப்­பா­ளர் தரப்­பும் திரை­ய­ரங்­கில்­தான் இப்­ப­டத்தை வெளி­யிட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்­துள்­ள­னர்.

"இது திகில் படம் என்­ப­தால் திரை­ய­ரங்­கில் பார்த்­தால்­தான் ரசி­கர்­க­ளி­டம் தாக்­கம் ஏற்­படும். வெளி­யீடு தள்­ளிப்­போ­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் குறித்து கவ­லைப்­ப­டா­மல் காத்­தி­ருந்­த­தற்­காக தயா­ரிப்­பா­ள­ருக்கு நன்றி தெரி­விக்க வேண்­டும். இந்­தப் படம் அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் ஏற்ற வகை­யில் உரு­வாகி உள்­ளது. குறிப்­பாக, குழந்­தை­களும் இந்­தப் படத்­தைப் பார்க்க முடி­யும்.

"கடந்த 2014ஆம் ஆண்டு வெளி­யான 'நாய்­கள் ஜாக்­கி­ரதை' படத்­துக்கு குழந்­தை­கள் மத்­தி­யில் பெரிய வர­வேற்பு கிடைத்­தது. அதன் பிறகு எங்கு சென்­றா­லும், குழந்­தை­கள் என் மீது அன்பை பொழி­கின்­ற­னர். எனவே, எனது படங்­களில் குழந்­தை­களை மகிழ்­விக்­க­வும் ஏதே­னும் இருக்க வேண்­டும் என முடிவு செய்­துள்­ளேன்.

"அந்த வகை­யில், 'ரங்கா' படத்­தி­லும் குழந்­தை­க­ளுக்­காக சிறிய நகைச்­சு­வைப் பகுதி இடம்­பெற்­றுள்­ளது," என்று சொல்­லும் சிபி­ராஜ், அடுத்து நேர­டித் தெலுங்­குப் படம் ஒன்­றில் நடித்து வரு­கி­றார்.

இதற்­காக, தெலுங்கு மொழி­யில் பேச கற்று வரு­கி­றா­ராம்.

"பாண்­டி­யன் ஆதி­மூ­லம் இயக்­கும் இந்த திகில் படம் தமி­ழி­லும் வெளி­யீடு காணும். இயற்­கைக்கு அப்­பாற்­பட்ட சக்­தி­கள் இடம்­பெ­றா­ம­லேயே உரு­வாகி உள்­ளது. நிச்­ச­ய­மாக அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் பயப்­பட வைக்­கும்.

"சில சம­யங்­களில் முழு­நீள வணி­கப் படங்­க­ளி­லும் நடிக்க வேண்­டிய கட்­டா­யம் நடி­கர்­க­ளுக்கு ஏற்­படும். தொடர்ந்து நல்ல விமர்­ச­னங்­க­ளைப் பெற வேண்­டும் என்­ப­தில் மட்­டுமே கவ­னம் செலுத்த முடி­யாது. நல்ல சம்­பாத்­தி­யம் என்­பதை மன­திற் கொண்டு சில கதை­க­ளைத் தேர்வு செய்ய வேண்­டி­யுள்­ளது. நானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல," என்று வெளிப்­ப­டை­யா­கப் பேசு­கி­றார் சிபி­ராஜ்.

ஏற்­கெ­னவே வெற்றி பெற்ற படங்­க­ளின் தலைப்பை புதுப்­ப­டங்­க­ளுக்­குச் சூட்­டு­வ­தில் தவ­றே­தும் இல்லை என்­பது இவ­ரது கருத்து. ரசி­கர்­கள் நன்கு அறிந்த அந்த தலைப்­பு­களை மீண்­டும் பயன்­ப­டுத்­தும்­போது, அது நேர்­ம­றைத் தாக்­கத்தை ஏற்­படுத்­தும் என நம்­பப்­ப­டு­கிறது என்­கி­றார்.

"'சத்யா', 'வால்­டர்', 'ரங்கா' என நான் நடித்த படங்­க­ளுக்­கும் பழைய படத் தலைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி உள்­ளோம். 'சத்யா' என்ற தலைப்பை மட்­டும் நான்­தான் பரிந்­து­ரைத்­தேன். நான் கமலின் தீவிர ரசி­கன். அவர் நடித்த 'சத்யா' படத்­தைப் பல­முறை பார்த்து ரசித்­துள்­ளேன். அத­னால் அந்­தத் தலைப்பை வைக்க வேண்­டும் என்று இயக்­கு­ந­ரி­டம் கேட்­டுக்­கொண்­டேன்," என்கிறார் சிபி.