இடைவிடாத படப்பிடிப்புகளுக்கு மத்தியில், தனது நெருங்கிய தோழி யின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளார் ராஷ்மிகா. தாம் மேற்கொண்ட மெனக்கடல் குறித்து அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
"திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4 மணிக்கு விமான நிலையத்திற்குச் சென்றேன். ஆனால் அதற்கு முன்பே விமானம் சென்றுவிட்டது என்றனர். அதனால் அடுத்த விமானத்தில் செல்ல நேரிட்டது. எனினும் சரியான நேரத்துக்கு திருமண மண்டபத்தை அடைந்துவிட்டேன்.
"எனது தோழி ராகினி என்னுடன் 19 ஆண்டுகளாக நட்பு பாராட்டி வருகிறார். அந்த நட்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ள ராஷ்மிகா, திருமண அலங்காரத்தில் தன் தோழி மிக அழகாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்காக தமது குடும்ப வழக்கப்படி பாரம்பரிய உடையணிந்து அனைவரையும் கவர்ந்த அவர், தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'சென்டிமீட்டர்' திரைப்படம். நாயகியை மையப்படுத்தும் கதையில் மஞ்சு வாரியர் முதன்மைக் கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு பாடலையும் பாடியுள்ளார். யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
மே 20ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'கிம் கிம்' எனத் தொடங்கும் இந்தப் பாடலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். ராம் சுரேந்தர் இசையில் உருவாகியுள்ள இதன் மூலம் முதல் முறையாக தமிழில் பாடியுள்ளார் மஞ்சு வாரியர்.
நகைச்சுவை நடிகரும் தொகுப்பாளருமான விக்னேஷ் காந்த் திருமணம் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. அவர் தமது உறவினர் மகளை மணந்துள்ளதாகக் கூறப் படுகிறது. மிக நெருக்கமான உறவினர்களும் நண்பர் களும் மட்டுமே திருமணத் துக்கு அழைக்கப்பட்டிருந்த னர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை வெளி யிட்டுள்ளார் விக்னேஷ் காந்த்.
, :

