திரைத்துளி­கள்

 ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்குமாரின் 61வது படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியீடு காண வாய்ப்பு உள்ளதாக அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

'ஏகே 61' என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் மூன்றாவது முறையாக வினோத்தும் போனி கபூரும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறதாம். அநேகமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிடும் என இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்தே தீபாவளி வெளியீடாக இந்தப் படத்தை களமிறக்க போனி கபூர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

 அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்துள்ள தாம். எனவே இப்படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறார். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் திரிஷா. தனது புதுப்படம் வெற்றிபெற வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டதாகத் தகவல். 'தி ரோட்' படத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர், திரிஷாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 தனுஷின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், லைக்கா நிறு வனத்தின் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இணைய ஊடுருவல்காரர்கள் சிலர் தங்கள் கைவரிசையைக் காட்டி உள்ளனர். இதுகுறித்து இரு நிறுவனங்களும் யூடியூப் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளன. மிக விரைவில் அந்த சேனல்கள் மீட்கப்படும் என இரு நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தனுஷ் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 கான் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளார் பூஜா ஹெக்டே. இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவர் விமான நிலையம் வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் திடீரென அங்கு கூடிவிட்டனர். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ரசிகர்கள் ஏந்தி நிற்பதைக் கண்டபோது தமக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டதாக அவர் பின்னர் டுவிட்டரில் பதிவிட்டார். மேலும், விமான நிலையத்தில் தமக்காகக் காத்திருந்த ரசிகர்களின் அருகில் சென்று கைகுலுக்கி பேசிவிட்டு, நன்றி தெரிவித்த பிறகே விமானத்தில் ஏறினாராம். அவர் ரசிகர்களுடன் பேசும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

 தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல கதாபாத்திரங்கள் அமையாதது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் சித்தார்த். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கும் எண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பாக வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கும் திரைப் பிரமுகர்களில் சித்தார்த்தும் ஒருவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!